சிங்கப்பூருக்கு இந்தோனீசியக் கோழி; இறக்குமதிக்கு அனுமதி

சிங்கப்பூருக்கு இந்தோனீசியக் கோழி; இறக்குமதிக்கு அனுமதி

2 mins read
eb8d1f8f-fc18-46a2-9c60-69c7bdd73cd9
இந்தோனீசிய கோழிப் பண்ணையில் நிலவரங்களையும் கோழிகளையும் மேற்பார்வையிட்டு அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர். படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு -

சிங்­கப்­பூர் விரை­வில் இந்­தோ­னீ­சியா­வில் இருந்து கோழி­க­ளைப் பெறும்.

குளி­ரூட்­டப்­பட்ட, உறைய வைக்­கப்­பட்ட, பதப்­ப­டுத்­தப்­பட்ட கோழி இறைச்­சியை அனுப்­பு­வ­தற்கு உரிய புதிய நாடாக இந்­தோ­னீ­சி­யாவை சிங்­கப்­பூர் அங்­கீ­க­ரித்து இருக்கிறது என்று சிங்­கப்­பூர் உணவு அமைப்பு ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தது.

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட இந்­தோ­னீசிய நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து கோழி­களை இப்­போது இறக்­கு­மதி செய்ய முடி­யும் என்­றும் அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

பிரே­சில், தாய்­லாந்து, ஆஸ்­திரே­லிய நாடு­களில் இருந்து இப்­போது சிங்­கப்­பூர் கோழி­களை வாங்­கு­கிறது. நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூவும் ஃபேஸ்புக்­கில் நேற்று இது பற்றி அறி­வித்­தார்.

கோழி­களை இறக்­கு­மதி செய்­யலாம் என்று சிங்­கப்­பூர் 20 நாடு­களைத் தேர்ந்­தெ­டுத்து இருக்­கிறது. இதில் இப்­போது இந்­தோ­னீ­சி­யா­வும் சேர்ந்து இருக்­கிறது.

கோழி கொள்­மு­தலைப் பல­முனைப்­ப­டுத்­தும் முயற்­சி­களில் இது மேலும் ஒரு படி என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

உல­க­ள­வில் உண­வுப்­பொ­ருள்­களின் விநி­யோ­கம் தொடர்ந்து நிச்­ச­ய­மில்­லா­மல்­தான் இருக்­கும்.

இந்த விநி­யோ­கத்­தில் மேலும் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­ட­லாம். விலை­யும் ஏறி இறங்­க­லாம் என்­ப­தால் அதற்­கேற்ப மனதளவில் நாம் மாறிக்கொள்ள வேண்­டும் என்று அமைச்­சர் மேலும் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் உண­வுப்­பொ­ருள் போதிய அள­வுக்குக் கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்த அர­சாங்­கம் நீண்­ட­கால திட்­டங்­களை நடை­மு­றைப்­படுத்தி வரு­கிறது.

பல்­வேறு செயல்­திட்­டங்­க­ளை­யும் அது அம­லாக்கி வரு­கிறது.

அதே­வே­ளை­யில், இதில் பய­னீட்­டா­ளர்­க­ளுக்­கும் உணவு தொழில்­து­றை­யைச் சேர்ந்­த­வர்­களுக்­கும் முக்­கி­ய­மான பங்கு இருக்­கிறது என்று திரு­வாட்டி ஃபூ கூறி­னார்.

பய­னீட்­டா­ளர்­கள் தங்­கள் உண­வுப்­பொ­ருள் விருப்­பங்­க­ளைப் பொறுத்­த­வரை விட்­டு­கொ­டுத்து நடந்­து­கொள்ள வேண்­டும். தேவை­யா­ன­போது மாற்று பொருள்­களை அவர்­கள் தேர்ந்­தெ­டுத்­துக்கொள்ள வேண்­டும். இப்­படி செயல்­ப­டு­வ­தன் மூலம் சிங்­கப்­பூ­ரின் மீள்­தி­றன் மேம்­ப­ட­வும் அவர்­கள் உத­வ­லாம் என்று அவர் குறிப்பிட்டார்.