36 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தில் மார்கோஸ் வாரிசு

பிலிப்­பீன்­சின் 17வது அதி­ப­ராக நேற்று ஃபெர்டி­னாண்ட் மார்­கோஸ் ஜூனி­யர் பதவி ஏற்­றுக்­கொண்­டார். அதன்­மூ­லம் 36 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மார்­கோஸ் குடும்­பம் அதி­கா­ரத்­திற்கு திரும்பி இருக்­கிறது. அந்­தக் குடும்­பம் அவ­மா­னப்­பட்டு பிலிப்­பீன்­சை­விட்டு ஓடிய குடும்­பம்.

"இந்த நிகழ்ச்சி ஒரு வர­லாற்று முக்­கிய நிகழ்ச்சி. மக்­களே நீங்கள் சாதித்து இருக்­கி­றீர்­கள். இது ஊக்க­ம­ளிக்­கிறது," என்று பதவி ஏற்­கும்­போது திரு மார்­கோஸ் ஜுனி­யர் குறிப்­பிட்­டார்.

புதிய அதி­பர் 30 நிமி­டங்­கள் உரை­யாற்­றி­னார். நடு நடுவே கை தட்­டல்­கள் விண்­ணைப் பிளந்­தன.

தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது தன்­னு­டைய தந்­தை­யின் ஆட்­சியை வெகு­வாக புகழ்ந்து ஆத­ரவு திரட்­டி­னார் மார்­கோஸ் ஜூனி­யர்.

நாட்டு மக்­க­ளுக்குப் பல­வற்­றைச் செய்­யப்­போ­வ­தாக குறிப்­பிட்டு தன்­திட்­டங்­கள் பற்றி அவர் பர­வ­லாக எடுத்­து­ரைத்­தார்.

"என் தந்தை அதிக, சிறந்த சாலை­களை அமைத்­தார். அவருக்கு முந்­திய நிர்­வா­கங்­க­ளை­விட அதி­க­மாக அரிசி உற்­பத்­தியை சாதித்­தார்," என்று தனது பேச்­சின் முடி­வில் மார்­கோஸ் ஜூனி­யர் குறிப்­பிட்­டார். அவர் மணி­லா­வில் தேசிய அருங்­காட்­சி­ய­கத்­தில் நடந்த பொது நிகழ்ச்­சி­யில் நேற்று பத­விப் பிர­மா­ணம் எடுத்­துக்­கொண்­டார்.

அந்த நிகழ்ச்­சி­யில் மார்­கோஸ் ஜுனி­ய­ரின் மனைவி லூஸி, 62, அவ­ரின் புதல்­வர்­கள், அவ­ரின் தாயா­ரான 92 வயது இமெல்டா, அவரின் சகோ­த­ரி­கள் அனை­வ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

தந்தை மார்­கோஸ் 1965ஆம் ஆண்­டில் இருந்து 20 ஆண்டு காலம் பிலிப்­பீன்சை ஆட்சி செய்­தார். அந்த ஆட்­சிக் காலத்­தில் கிட்­டத்­தட்ட பாதிக்­கா­லம் நாடு ராணுவ ஆட்­சி­யின் கீழ் இருந்­தது.

அவ­ரு­டைய ஆட்­சி­யின் கீழ் ஆயி­ர­க்க­ணக்­கா­ன­வர்­கள் சிறைப்­படுத்­தப்­பட்­ட­னர். கொல்­லப்­பட்­ட­னர். அர­சாங்­கப் பணம் பில்­லி­யன் கணக்­கில் மாய­மா­னது.

கடை­சி­யில் மார்­கோ­சும் அவ­ரு­டைய குடும்­பத்­தா­ரும் அமெ­ரிக்க விமா­னத்­தில் ஹவாய் தீவுக்குத் தப்பி ஓடி­விட்­டார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!