சில உணவகங்களில் உணவு விலை அதிகரிக்கலாம்

சில உணவகங்களில் உணவு விலை அதிகரிக்கலாம்

1 mins read
576f4ec5-52c1-46b6-8aee-531fed9ca6be
தனது உணவகத்தில் உணவின் விலை அதிகரிக்கப்படலாம் என்று 'ஆல் திங்ஸ் டிலிஷியஸ்' உரிமையாளர் தேவி இமெல்டா வாத்வா கூறியுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் சில உணவு, பானக் கடைகளில் உணவு விலை அதிகரிக்கக்கூடும் என்று சில வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரேன் போர் தொடர்வதால் உணவகங்களை செயல்படுத்துவதற்கான செலவு கூடி வருவதை எண்ணி உணவு, பானக் கடைகளின் உரிமையாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

அதனால் இந்நிலை உருவாகியுள்ளது.

தற்போதைக்குக் கூடுதல் செலவைத் தாங்களே சமாளிப்பதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அவ்வாறே நீண்ட காலத்திற்கு இயங்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், சில உணவு, பானக் கடைகளில் மின்சாரக் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது.

சில கடைகளில் கட்டணம் கிட்டத்தட்ட இரு மடங்கானது.

இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிவரை மின்சாரக் கட்டணம் சுமார் எட்டு விழுக்காடு அதிகரிக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.