மோசடி: 400 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துகள் முடக்கம்

2 mins read

சென்னை தி.நக­ரில் உள்ள சர­வணா ஸ்டோர்ஸ் (கோல்டு பேலஸ்) நிறு­வ­னத்­திற்கு எதி­ராக கடந்த ஏப்­ரல் மாதம் காவல்­து­றை­யின் குற்­றப் புல­னாய்வுப் பிரிவில் புகார் செய்­யப்­பட்­டது.

தவ­றான நிதி­நிலை அறிக்­கை­யைத் தாக்­கல் செய்து தங்­க­ளது வங்­கி­யில் இந்த நிறு­வ­னம் ரூ.240 கோடி கடன் வாங்­கி­ய­தா­க­வும் அந்­தக் கடன்­தொ­கையை வேறு கார­ணங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தி­ய­தா­க­வும் இந்­தி­யன் வங்­கி­யின் தலைமை நிர்­வாக அதி­காரி கே.எல். குப்தா அந்­தப் புகாரை கொடுத்­தி­ருந்­தார்.

இப்­பு­கா­ரைத் தொடர்ந்து சர­வணா ஸ்டோர்ஸ் பங்­கு­தா­ரர்­க­ளான மறைந்த பல்­லக்­கு துரை, பி.சுஜாதா, ஒய்.பி.ஷிர­வன் ஆகி­யோர் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டது.

இதற்கு உடந்­தை­யாக இருந்த சில அதி­கா­ரி­கள் மீதும் வழக்­குப் போடப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டது. மேலும், கடன் தொகை, வட்­டி­யு­டன் பல மடங்கு அதி­க­ரித்­த­தா­கச் செய்­யப்­பட்ட புகா­ரைத் தொடர்ந்து கோல்டு பேலஸுக்குச் சொந்­த­மான பொருள்­களைப் பறிமுதல் செய்ய எழும்­பூர் தலைமை குற்­ற­வி­யல் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. அம­லாக்­கத் துறை­யின் விசா­ர­ணைக்­கும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து, கள்­ளப்

­ப­ணத்தை நல்ல பண­மாக மாற்­றும் குற்­றத்­தின் அடிப்­ப­டை­யில் இந்நிறு­ வ­னத்­துக்­குச் சொந்­த­மான ரூ.234.75 கோடி சொத்­து­களை அம­லாக்­கத் துறை முடக்­கி­யுள்­ளது.

இந்­தக் குற்­றத்­திற்­காக அம­லாக்­கத்­துறை இந்த அள­வுக்கு அதி­க­மான சொத்­து­களை முடக்கி இருப்­பது இது முதல்­முறை என்று கூறப்­

ப­டு­கிறது.

மற்­றொரு சம்­ப­வத்­தில், லாட்­டரி தொழி­ல­தி­பர் சாண்­டி­யாகோ மார்ட்­டின் என்­ப­வ­ரின் ரூ.173.48 கோடி மதிப்­பி­லான சொத்­து­க­ளை­யும் அம­லாக்­கத் துறை முடக்­கி­யுள்­ளது. கொச்­சி­யில் உள்ள மத்­திய குற்­றப் புல­னாய்வு அமைப்­பின் லஞ்ச ஊழல் தடுப்­புப் பிரி­வு அளித்த குற்­றச்­சாட்­டின் அடிப்­ப­டை­யில் இவ­ரது சொத்­து­கள் முடக்­கப்­பட்டுள்­ளன.

கோவை மாவட்­டத்­தைச் சேர்ந்த மார்ட்­டின், சிக்­கிம் மாநி­லத்­தில் லாட்­டரி தொழில் மூலம் கிடைத்த ரூ.910 கோடியை மறைத்து 40க்கு மேற்­பட்ட நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­த­தும் சட்­ட­வி­ரோத பணப் பறி­மாற்­றம் மூலம் சொத்­து­களை வாங்­கிக் குவித்­த­தும் அம­லாக்­கத் துறை விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.