தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

11 வாகனங்களை மோதித் தள்ளிய லாரி ஓட்டுநர் கைது

2 mins read
b1be080d-6c51-4d01-b4d4-d92826a025b6
-

உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டியை நோக்­கிச் செல்­லும் ஜோகூர் பாலத்­தில் நேற்று விபத்து நிகழ்ந்­தது. பாலத்­தில் இருந்த கிட்­டத்­தட்ட 11 வாக­னங்­கள் மீது லாரி மோதி சேதம் விளை­வித்­தது.

விபத்­துக்­குக் கார­ண­மாக இருந்­த­தா­கக் கூறப்­படும் லாரி

ஓட்­டு­நர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அந்த 34 வயது ஆட­வ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது என்­றும் அவ­ருடைய சிறுநீர் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்­றும் மலே­சி­யா­வின் போக்­கு­

வ­ரத்து அமைச்­சர் வீ கா சியோங் கூறி­னார்.

"சம்­பந்­தப்­பட்ட லாரி ஓட்­டு­நர் விதி­மு­றைக்கு உட்­பட்டு நடந்­து­கொள்ளத் தவ­றி­யது நிரூ­பிக்­கப்

பட்­டால் அவ­ருக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இத்­த­கைய விதி­மீ­றல்­கள் இலே­சாக எடுத்­துக்­கொள்­ளப்

படாது.

"சாலை­களில் பய­ணம் செய்

பவர்­க­ளின் பாது­காப்பு மற்­றும்

உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­டுத்­தக்

கூடிய இத்­த­கைய சம்­ப­வங்­க­ளுக்­குக் கார­ண­மா­னோ­ருக்கு மிகக் கடு­மை­யான தண்­டனை விதிக்­கப்­படும்," என்று அமைச்­சர் வீ தெரி­வித்­தார்.

விபத்­தில் சிக்­கிய வாக­னங்­களில் மலே­சி­யா­வைச் சேர்ந்த வாக­னங்­களும் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த வாக­னங்­களும் அடங்­கும்.

விபத்­தின் விளை­வாக ஜோகூர் பாலத்­தில் உள்ள மூன்­றில் இரு தடங்­கள் சில மணி நேரத்­துக்கு மூடப்­பட்­டி­ருந்­தன. அவற்­றில் வாக­னங்­கள் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­ட­தாக குடி­நு­ழைவு,

சோத­னைச்­சா­வடி ஆணை­யம் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டது.

இத­னால் போக்­கு­வ­ரத்து

நெரி­சல் ஏற்­பட்­டது.

காலை 11.15 அள­வில் அந்த இரண்டு தடங்­களில் ஒரு தடம் போக்­கு­வ­ரத்­துக்கு மீண்­டும்

திறந்­து­வி­டப்­பட்­டது.

நண்­ப­கல் அள­வில் அனைத்து தடங்­களும் வழக்­க­நி­லைக்கு

திரும்­பி­ய­தாக ஆணை­யம் தெரி­வித்­தது.

ஜோகூர் பாலம் வழி­யா­கப்

பய­ணம் செய்­வ­தற்கு முன்பு நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் 'ஒன் மோட்­ட­ரிங்' இணை­யப்­பக்­கத்­துக்­குச் சென்று போக்­கு­வ­ரத்து நிலை குறித்து தெரிந்­து­கொள்­ளு­மாறு பய­ணி­க­ளுக்கு அது ஆலோ­சனை வழங்­கி­யது.

சிங்­கப்­பூர் நோக்­கிச் செல்­லும் ஜோகூர் பாலத்­தில் வாக­னங்­களை லாரி மோதித் தள்­ளும் காட்­சி­யைக் காட்­டும் காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் நேற்று வலம் வந்­தது.

விபத்து நிகழ்ந்த இடத்­துக்கு மிக அரு­கில் எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான பேருந்து இருந்­தது.

அப்­பே­ருந்­தில் இருந்த பய­ணி­கள் யாரும் காய­ம­டை­யவில்லை என்று அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், சம்­பந்­தப்­பட்ட லாரி­யில் இயந்­தி­ரக் கோளாறு ஏற்­பட்­ட­தால் விபத்து நிகழ்ந்­தது என ஜோகூர் மாநி­லக் காவல்­துறை கூறி­ய­தாக மலே­சிய ஊட­கம் தெரி­வித்­தது.

ஜோகூர் பாலத்­தில் சென்­று­கொண்­டி­ருந்த வாக­னங்­கள் மீது மோதி சேதப்­ப­டுத்­திய லாரி.

படம்: ஃபேஸ்புக்