உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் ஜோகூர் பாலத்தில் நேற்று விபத்து நிகழ்ந்தது. பாலத்தில் இருந்த கிட்டத்தட்ட 11 வாகனங்கள் மீது லாரி மோதி சேதம் விளைவித்தது.
விபத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் லாரி
ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த 34 வயது ஆடவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் அவருடைய சிறுநீர் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் மலேசியாவின் போக்கு
வரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறினார்.
"சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் விதிமுறைக்கு உட்பட்டு நடந்துகொள்ளத் தவறியது நிரூபிக்கப்
பட்டால் அவருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய விதிமீறல்கள் இலேசாக எடுத்துக்கொள்ளப்
படாது.
"சாலைகளில் பயணம் செய்
பவர்களின் பாதுகாப்பு மற்றும்
உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்
கூடிய இத்தகைய சம்பவங்களுக்குக் காரணமானோருக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும்," என்று அமைச்சர் வீ தெரிவித்தார்.
விபத்தில் சிக்கிய வாகனங்களில் மலேசியாவைச் சேர்ந்த வாகனங்களும் சிங்கப்பூரைச் சேர்ந்த வாகனங்களும் அடங்கும்.
விபத்தின் விளைவாக ஜோகூர் பாலத்தில் உள்ள மூன்றில் இரு தடங்கள் சில மணி நேரத்துக்கு மூடப்பட்டிருந்தன. அவற்றில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக குடிநுழைவு,
சோதனைச்சாவடி ஆணையம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
இதனால் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டது.
காலை 11.15 அளவில் அந்த இரண்டு தடங்களில் ஒரு தடம் போக்குவரத்துக்கு மீண்டும்
திறந்துவிடப்பட்டது.
நண்பகல் அளவில் அனைத்து தடங்களும் வழக்கநிலைக்கு
திரும்பியதாக ஆணையம் தெரிவித்தது.
ஜோகூர் பாலம் வழியாகப்
பயணம் செய்வதற்கு முன்பு நிலப் போக்குவரத்து ஆணையத்தின் 'ஒன் மோட்டரிங்' இணையப்பக்கத்துக்குச் சென்று போக்குவரத்து நிலை குறித்து தெரிந்துகொள்ளுமாறு பயணிகளுக்கு அது ஆலோசனை வழங்கியது.
சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் ஜோகூர் பாலத்தில் வாகனங்களை லாரி மோதித் தள்ளும் காட்சியைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் நேற்று வலம் வந்தது.
விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மிக அருகில் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து இருந்தது.
அப்பேருந்தில் இருந்த பயணிகள் யாரும் காயமடையவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட லாரியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்தது என ஜோகூர் மாநிலக் காவல்துறை கூறியதாக மலேசிய ஊடகம் தெரிவித்தது.
ஜோகூர் பாலத்தில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி சேதப்படுத்திய லாரி.
படம்: ஃபேஸ்புக்