சாதனை அளவுக்கு தெமாசெக் முதலீடு

சாதனை அளவுக்கு தெமாசெக் முதலீடு

2 mins read

தெமாசெக் ஹோல்டிங்ஸின் பட்டியலிடப்படாத சொத்துகளின் மதிப்பு 4 மடங்கு அதிகரித்து $210 பில்லியனாகியது

தெமா­செக் நிறு­வ­னத்­தின் முத­லீடு சாதனை அள­வுக்கு உயர்ந்து இருக்­கிறது. அதன் முத­லா­வது முத­லீட்டு இட­மாக சீனா இருந்தது. ஆனால் இப்போது சிங்­கப்­பூர் முதலிடத்தில் திகழ்­கிறது.

சந்தை ஏற்ற இறக்­க­மாக இருக்­கிறது என்­றா­லும் தெமா­செக்­கின் நிகர முத­லீட்­டின் மதிப்பு, முதல் தட­வை­யாக $400 பில்­லி­ய­னைத் தாண்டி இருக்­கிறது.

உல­கின் அதிக முத­லீட்டு நிறு­வ­னங்­களில் ஒன்­றாகக் கரு­தப்­படும் தெமா­செக், நேற்று தனது வருடாந்­திர மறு ஆய்வு அறிக்­கையை வெளி­யிட்­டது. 2022 மார்ச் 31ஆம் தேதி முடி­வ­டைந்த நிதி­யாண்­டில் தெமா­செக் $61 பில்லியன் முத­லீடு செய்­தது.

இத­னை­யும் சேர்த்து அந்த கால­கட்­டத்­திற்­கான தெமா­செக்­கின் நிகர முத­லீடு சாதனை அள­வாக $403 பில்­லி­ய­னா­கி­யது.

இந்த மதிப்பு, சென்ற ஆண்டு மார்ச் முடி­வில் $381 பில்­லி­ய­னாக இருந்­தது. தெமா­செக்­கின் சிங்­கப்­பூர் சொத்­து­கள் இப்­போது அதன் முத­லீட்­டில் 27% ஆகும்.

இந்த அளவு ஓராண்­டுக்கு முன் 24% ஆக இருந்­தது. சீனா­வில் தெமா­செக் முத­லீடு 27%லிருந்து 22% ஆகக் குறைந்தது.

இதனிடையே, தெமா­செக் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் முத­லீடு செய்­துள்ள பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­ப­டாத சொத்­து­க­ளின் மதிப்பு 2022 மார்ச் 31ஆம் தேதி முடி­வ­டைந்த நிதி ஆண்­டில் நான்கு மடங்கு அதி­க­ரித்து $210 பில்­லி­ய­னா­கி­யது.

இந்த மதிப்பு சுமார் பத்து ஆண்டுக்கு முன் $53 பில்­லி­ய­னாக இருந்­தது. சந்­தை­யில் பட்­டி­லி­ய­டப்­படாத முத­லீ­டு­கள் ஆண்­டுக்கு 10 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான வரு­வாயை ஈட்டித் தந்­தன.

இத்­த­கைய முத­லீ­டு­களில் இருந்து பெறப்­படும் வரு­வாய், அந்த முத­லீ­டு­கள் பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லி­டப்­ப­டும்­போ­தும் அல்­லது விற்­கப்­ப­டும்­போ­தும் நிறு­வ­னங்­க­ளின் வலு­வான செயல்­தி­றன் மூல­மா­க­வும் பெறப்­ப­டு­கிறது.

இப்­போ­தைய நில­வ­ரப்­படி தெமாசெக் குழு­மத்­தின் முத­லீ­டு­களில் பங்­குச் சந்­தை­யில் பட்­டி­லி­ய­டப்­ப­டாத சொத்­து­க­ளின் மதிப்பு 52% ஆக இருக்­கிறது.

சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் பங்குச் சந்­தை­யில் பட்­டி­லி­ய­டப்­படாத முத­லீ­டு­களில் 36%க்கு பொறுப்பு வகிக்­கின்­றன.

இதர தனி­யார் நிறு­வ­னங்­களும் தொடங்கி அதிக காலம் ஆகாத நிறு­வ­னங்­களும் 26% முத­லீட்­டுக்கு பொறுப்பு வகிக்­கின்­றன.

சொத்து நிர்­வாக நிறு­வ­னங்­கள் 20%ஐ தங்­கள் வசம் கொண்­டுள்­ளன. தனி­யார் பங்­கு­மு­தல் மற்­றும் கடன் நிதி­ 18% அள­வுக்கு உள்­ளன.

மேப்­பிள்ட்ரீ, எஸ்பி குழு­மம், பிஎஸ்ஏ போன்ற முதிர்ச்­சி­ய­டைந்த நிறு­வ­னங்­க­ளிடம் இருந்து நிலை­யாக கிடைக்­கும் லாப­ஈ­வு­கள் மூலம் தெமா­செக்­கின் பங்­குச் சந்­தை­யில் பட்டி­ய­லி­டப்­ப­டாத முத­லீ­டு­கள் வரு­வா­யைப் பெருக்கித் தருக்­கின்­றன.

கடந்த பல ஆண்­டு­களில் தெமாசெக் பலப்­ப­டுத்தி வந்­தி­ருக்கும் உயர்­தர முதலீட்டு நிதியில் இருந்து வரு­வாய் விநி­யோ­கிக்­கப்­படு­கிறது.

பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிடப்­படாத சொத்­து­கள் பட்­டி­ய­லிடப் படும்போது அல்­லது விற்­கப்­ப­டும்­போது வருவாய் கிடைக்­கிறது என்று தெமாசெக் வரு­டாந்­திர அறிக்­கை­யில் தெரி­வித்தது.