அதிமுகவில் பழனிசாமி, பன்னீர், சசிகலா முத்தரப்பு போர்

அதிமுகவில் பழனிசாமி, பன்னீர், சசிகலா முத்தரப்பு போர்

2 mins read
2268d321-af1e-4eab-9f4f-3959e52d6d00
அடிதடியை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் இழுத்து மூடப்பட்டு முத்திரை வைக்கப்பட்டது. அலுவலகத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டு எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். படம்: ஊடகம் -

தமிழ்­நாட்­டின் மிக முக்­கிய திராவிட கட்சி­களில் ஒன்­றான அதி­மு­க­வில் மூன்று தரப்­பு­களுக்கு இடை­யில் பிரச்­சினை விஸ்வ­ரூ­பம் எடுக்­கிறது.

கட்­சி­யின் பொதுக்­கு­ழு­வைக் கூட்டி தலை­மைப் பொறு­ப்பு தனக்கே என்­பதை தற்­கா­லி­க­மாக மெய்­ப்பித்து இருக்­கும் முன்னாள் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, கட்சி அலு­வலகத்தை தன் வசப்­ப­டுத்த நீதி­மன்­றத்தை நாடி மனு செய்து இருக்­கி­றார். அந்த மனு இன்று விசா­ர­ணைக்கு வரும் என்று தெரி­கிறது.

அதே வேளை­யில், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதி­முக பொதுக்­குழுக் கூட்­டத்தைச் செல்­லாது என்று அறி­விக்­கும்­படி கேட்டு உச்ச நீதிமன்­றத்தை நாடப்­போ­வ­தாக நேற்று ஓ. பன்­னீர்செல்­வம் தரப்பு பர­பரப்­பாக அறி­வித்­தது.

கட்­சி­யின் பொரு­ளா­ள­ராக இன்னமும் தானே இருப்பதாகச் சொல்லி, சென்னை மைலாப்பூர் கரூர் வைஸ்யா வங்­கிக்கு கடி­தம் எழுதி, கட்சிக் கணக்கு­களை நிர்­வகிக்க வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று பன்­னீர் தரப்பு வங்கியைக் கேட்­டுக் கொண்­டுள்­ளது. அதி­மு­க­வுக்கு கடந்த 2020-21ஆம் ஆண்டு நில­வ­ரப்­படி ரூ.260.16 கோடி மதிப்­புள்ள சொத்­துகள் உள்­ளதாக அறிவிக்கப்பட்டது.

இத­னி­டையே, கொலை நோக்­கத்­து­டன் தன் தரப்பு தொண்­டர்­க­ளைத் தாக்க முயன்­ற­தாக பன்­னீர் தரப்பு மீது நேற்று காவல்­து­றை­யில் பழ­னி­சாமி தரப்பு புகார் செய்­தது. அதி­முக தலைமை அலு­வ­ல­கம் அருகே திங்கட்கிழமை மோத­லில் ஈடுபட்ட 400 பேர் மீது காவல்­து­றை­ வழக்­குப்­ பதிந்­துள்ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யில், கட்­சித் தொண்­ட­ர்க­ளிடம் ஆத­ரவு திரட்டி வரும் அதி­முக முன்­னாள் பொதுச் செய­லா­ளர் சசி­கலா, பழ­னி­சாமி அரங்­கேற்றி இருக்­கும் நாட­கமும் பன்­னீர் செல்­வத்தை நீக்­கி­யதும் அறவே செல்­லாது என்று புதுக்கோட்­டை­யில் தெரி­வித்­தார். கட்சி விரை­வில் தன் தலை­மை­யில் பல­ம­டை­யும் என்­றாரவர்.

மேலும் செய்தி பக்­கம் 7ல்