சிங்கப்பூருக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடான மலேசியா, கடந்த மாதம் அதற்கு தடை விதித்ததால் உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் இதர நாடுகளிலிருந்து கோழி இறைச்சி இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுத்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக இந்தோனீசியாவிலிருந்து கோழி இறைச்சி இறக்குமதி செய்ய ஜூன் 30ஆம் தேதி சிங்கப்பூர் உணவு அமைப்பு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் இந்தோனீ சியாவில் இருந்து உறைய வைக்கப் பட்ட கோழி இறைச்சியை சிங்கப் பூருக்கு ஏற்றுமதி செய்யும் பணி அதிகாரபூர்வமாகத் தொடங்கப் பட்டுள்ளது.
ஏறக்குறைய இரண்டு பில்லியன் ருப்பியா மதிப்புள்ள (S$187,749) 50,000 கிலோ கோழி இறைச்சி புதன்கிழமை மாலை ஒருங்கிணைக் கப்பட்ட சரோயன் போக்பண்ட் இந்தோனீசியா (சிபிஐ) கோழிப் பண்ணையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
வடக்கு ஜகார்த்தாவில் உள்ள தஞ்சுங் பிரியோக் துறைமுகம் வழியாக வெள்ளிக்கிழமை கோழி இறைச்சி சிங்கப்பூர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவுக்கு அடுத்ததாக முதல் முறையாக இந்தோனீசியாவின் 'சிபிஐ', சியோமாஸ் அடிசட்வா ஆகிய நிறுவனங்கள் நடத்தும் கோழிப் பண்ணைகளிலிருந்து கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படுகிறது.
இவ்வாண்டு முழுவதும் 'சிபிஐ' நிறுவனம் மட்டும் சிங்கப்பூருக்கு ஆயிரம் டன் உறையவைக்கப்பட்ட கோழி இறைச்சியை விநியோகிக்கவிருக்கிறது.
சென்ற புதன்கிழமை வடக்கு ஜகார்த்தாவில் உள்ள 'சிபிஐ' தலை மையகத்தில் சிங்கப்பூருக்கு முதல் ஏற்றுமதியை குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் ஹாடி குணாவான் ஜோ, ஏற்றுமதி சிறப் பான முறையில் நீடிக்க வேண்டும் என்றார்.
உலகளாவிய உணவு நெருக்கடி களுக்கு இடையே இந்த ஏற்றுமதி இந்தோனீசியாவின் கோழிப் பண்ணைகளுக்கு புதிய எதிர் காலத்தை ஏற்படுத்தித் தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரி வித்தார். ஆயிரம் டன் கோழி இறைச்சியின் ஒப்பந்த மதிப்பு 40 பில்லியன் ருப்பியா என்று நிகழ்ச்சி யில் பேசியபோது இந்தோனீசிய வேளாண் அமைச்சரான சியாருல் யாசின் லிம்போ சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூர் தவிர ஜப்பான், தீமோர் லெஸ்டே, பாப்புவா நியூ கினி, கத்தார் ஆகிய இடங் களுக்கும் 'சிபிஐ' கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்து வருகிறது.

