அவசரநிலை பிரகடனம்

அவசரநிலை பிரகடனம்

3 mins read
da4411a4-1d67-41a4-b46e-a37d297bb0b2
கொழும்பில் உள்ள இலங்கை பிரதமர் அலுவலகத் தையும் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகை யிட்டதால் அங்கு ராணுவம் களத்தில் இறக்கப்பட்டது. காவல் துறையினர் அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயற்சி செய்தனர்.படம்: ஏஎஃப்பி -

இலங்கையில் திடீர் திருப்பம்; அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகவில்லை

இலங்கை அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே பதவி வில­கு­வார் என பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில் திடீர் திருப்­ப­மாக அவர் தொடர்ந்து பத­வி­யில் நீடிப்­பார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று அதி­பர் மாளி­கைக்­குள் ஆர்ப்­பாட் டக்­கா­ரர்­கள் புகுந்­த­தால் அங் கிருந்து ரக­சி­ய­மாக வெளி­யே­றிய கோத்­த­பயா ராஜ­பக்சே நேற்று மாலத்­தீ­வில் தஞ்­சம் அடைந்து உள்­ளார்.

முன்­ன­தாக அவர் பதவி விலக முன்­வந்­துள்­ளார் என்­றும் புதி­ய­வர் ஒரு­வர் அதி­ப­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் கோத்­த­பாய ராஜ­பக்சே வெளி­நாடு சென்­றுள்­ள­தால் இலங்கை பிர­த­மர் ரணில் விக்­ர­ம­சிங்கே இடைக்­கால அதி­ப­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் நாடா­ளு­மன்ற சபா­நா­ய­கர் நேற்று அறி­வித்­தார்.

கோத்­த­பாய ராஜ­பக்சே, ரணில் விக்­ர­ம­சிங்கே ஆகிய இரு­வ­ரும் பத­வி­யில் இருக்­கக்­கூ­டாது என்று ஆயி­ரக் கணக்­கா­ன­வர்­கள் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டுள்ள நிலை­யில் இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

"தான் நாட்­டில் இல்­லா­த­தால் அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்டு அதி­ப­ராக செயல்­பட பிர­த­மரை நிய­மித்­துள்­ள­தாக அதி­பர் கோத்த பாய ராஜ­பக்சே என்­னி­டம் தெரி­வித்­தார்," என்று தொலைக்­காட்­சி­யில் வெளி­யான அறிக்­கை­யில் நாய­கர் மகிந்த யாப்பா தெரி­வித்து இருந்­தார்.

அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே நாட்­டை­விட்­டுத் தப்­பி­யோ­டிய சில மணி நேரங்­களில் நாடு முழு­வ­தும் அவ­ச­ர­நிலை அமல்­ப­டுத்­தப்­பட்­டது. இலங்கை தலை­ந­கர் கொழும்பு உட்­பட மேற்கு மாநி­லங்­கள் முழு­வ­தும் கால­வ­ரம்பு இல்­லாத ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப் பட்­டுள்­ள­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே அதி­பர் மாளி­கை­யைக் கைப்­பற்­றிய ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் நேற்று பிர­த­மர் அலு­வ­ல­கத்­தை­யும் முற்­று­கை­யிட்­ட­னர். சிலர் சுவர் ஏறி வீட்­டிற்­குள் நுழை­ய­வும் சிலர் அலு­வ­லக நுழை­வா­யி­லின் கதவை உடைக்­க­வும் முயற்சி செய்­த­னர். இத­னால் காவல்­து­றை­யி­னர் கண்­ணீர்ப் புகைக் குண்­டு­களை வீசி­னர். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கலைப் பதற்­காக வானத்தை நோக்கி காவல்­து­றை­யி­னர் சுட்­ட­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அதி­ப­ரின் இரு சகோ­த­ரர் களான முன்­னாள் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்­சே­யும் முன்­னாள் நிதி அமைச்­சரான பசில் ராஜ­பக்­சே­யும் இன்­ன­மும் இலங்­கை­யில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே, அவ­ரது மனைவி மற்­றும் இரண்டு பாது­கா­வ­லர்­கள் கொழும்­புக்கு அருகே உள்ள அனைத்­து­லக விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஆகா­யப் படை விமா­னம் மூலம் மாலத்­தீவு சென்­ற­தாக ஆகா­யப் படை­யின் அறிக்கை ஒன்று தெரி­வித்­தது. ஆனால் மாலத்­தீ­வில் அவர் தொடர்ந்து தங்க மாட்­டார், அங்­கி­ருந்து அவர் வேறு ஒரு நாட்­டுக்­குச் செல்­வார் என்­றும் மாலத்­தீ­வில் அவர் தங்க வச­தி­கள் ஏற்­பாடு ெசய்­யப்­பட்­டுள்ளதகா­க­வும் மாறு­பட்ட தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கோத்­த­பாய ராஜ­பக்சே முத­லில் துபாய் செல்ல திட்­ட­மிட்­டி­ருந்­தார். விமான நிலை­யத்­தி­லும் கடற்­ப­டைத் தளத்­தி­லும் மக்­கள் குவிந்­த­தால் அவர் வெளி­யேற முடி­ய­வில்லை. பின்­னர் சவூதி அரே­பியா, சீனா ஆகிய நாடு­க­ளி­டம் அவர் உதவி கேட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது. இரு நாடு­க­ளி­லி­ருந்­தும் சாத­க­மான பதில் வரா­த­த­தால் அமெ­ரிக்க குடி­யு­ரிமை பெற்ற அவர், அமெ­ரிக்­கா­வி­டம் உதவி கேட்­டுள்­ளார். அதற்கு அமெ­ரிக்­கா­வும் மறுத்­து­விட்­டது.

பின்­னர் இந்­தி­யா­வின் உத­வியை அவர் நாடி­யி­ருக்­கி­றார். விமா­னம் மூலம் செல்ல முடி­யா­த­தால் கடல் வழி­யாக இந்­தியா சென்று, அங்­கி­ருந்து துபாய் செல்ல அவர் அனு­மதி கேட்­டுள்­ளார்.

இந்­தி­யா­வும் சாத­க­மான பதில் அளிக்­காத நிலை­யில் தனி­யார் விமா­னம் மூலம் அவர் மாலத்­தீவு சென்­ற­தாக வேறு ஒரு தக­வல் தெரி­விக்­கிறது.