ஜூரோங் தீவில் தூய எரிசக்தித் தொழில்நுட்பம் தொடர்பாக
சிங்கப்பூர் $6 மில்லியன் முதலீடு செய்துள்ளது.
கடலில் மிதக்கும் சூரியசக்தித் தகடுகளும் இதில் அடங்கும்.
கடலில் வைக்கக்கூடிய மிதக்கும் சூரியசக்தித் தகடுகளை
சிங்கப்பூர் முதல்முறையாகப் பயன் படுத்துகிறது.
இந்தப் புதிய கட்டமைப்பை நார்வேயைச் சேர்ந்த சூரியசக்தி நிறுவனமான 'ஓஷன் சன்' வடிவமைத்துள்ளது.
பேரலைகள், கடல் கொந்தளிப்பு ஆகியவற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்தச் சூரியசக்தித் தகடு
களுக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடுமையான சூழல்
களிலும் அவற்றிலிருந்து சூரியசக்தியைப் பெறலாம் என்றும் அவை நம்பகமானவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அந்தத் தகடுகளை கெப்பல் எனர்ஜி நெக்சஸ் நிறு
வனம் சோதனையிட்டு வருகிறது.
இந்த அறிமுகத் திட்டம் மூலம் 1.5 மெகாவாட் சூரியசக்தி கிடைக்கும் என்று அறியப்படுகிறது.
தகடுகள் ஜூரோங் தீவு கரையோரம் வைக்கப்படும் என்று எரிசக்தி சந்தை ஆணையம், ஜேடிசி, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவை நேற்று தெரிவித்தன.
சிங்கப்பூரின் கரிம வெளி
யேற்றத்தில் 40 விழுக்காடு
மின்சாரத்துறையால் ஏற்படுவதாக மரினா பே சேண்ட்ஸில் நேற்று நடைபெற்ற எரிசக்திப் புத்தாக்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய வர்த்தக, தொழில் துணை
அமைச்சர் லோ யென் லிங் கூறினார்.
2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் இல்லாத நாடாக சிங்கப்பூர் திகழ, அரசாங்கம், தொழில்துறை, வர்த்தகங்கள் உட்பட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க
வேண்டும் என்றார் அவர்.

