இலங்கையின் இடைக்கால அதிபராக அந்நாட்டின் பிரதமரான ரணில் விக்ரமசிங்க பதவி
ஏற்றுள்ளார். கோத்தபாய ராஜபக்சே தமது பதவி விலகல் கடிதத்தை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பிவைத்தார்.
அவரது பதவி லிலகல்
கடிதத்தை இலங்கை நாடாளு
மன்றம் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
"அதிபர் பதவியிலிருந்து கோத்தபாய சட்டபூர்வமாக விலகி விட்டார். அவரது பதவி விலகல் கடிதத்தை நான் ஏற்றுக்கொண்டேன். இனி அரசமைப்புச் சட்டப்படி புதிய அதிபரை நியமிக்கும் படலம் தொடங்குகிறது. புதிய அதிபரை விரைவாகத் தேர்ந்
தெடுத்து நியமிக்க வேண்டும். இலங்கை நீண்ட ஜனநாயக வரலாறு கொண்ட நாடாகும். எதிர்
வரும் தேர்தல் ஜனநாயகத்தின் உயர் நெறிமுறைகளுடனும் வெளிப்படையாகவும் நடைபெறும்," என்று இலங்கை நாடாளுமன்ற நாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன உறுதி அளித்தார்.
நாடாளுமன்றம் இன்று கூடும் என்று செய்தியாளர்களிடம்
அபேவர்த்தன நேற்று தெரிவித்தார். புதிய அதிபருக்கான வாக்
களிப்பு இம்மாதம் 20ஆம் தேதியன்று நடைபெறும் என்றார் அவர்.
"ஏழு நாள்களுக்குள் புதிய அதிபரை நியமிக்க இலக்கு கொண்டுள்ளேன். இது நிறைவேற அனைத்துத் தரப்பினரும்
ஒத்துழைப்பு நல்க வேண்டும்," என்று அபேவர்த்தன கேட்டுக் கொண்டார். அடுத்த அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்க வேண்டும் என இலங்கையை ஆளும் கட்சி விரும்புகிறது. ஆனால் ராஜபக்சே குடும்பத்தினரைப் போலவே ரணிலும் பதவி துறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்நிலையில், அதிபர் தேர்தல் வேட்பாளராக திரு சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்துள்ளன. மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அல்ஹபெருமவும் அதிபராகும் சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாய, ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்குப் பதிலாக இருவரைத் தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் விரைகின்றன. இது சாத்தியமாகும் வகையில் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்தை அமைப்பதில் அவை தீவிரம் காட்டி
வருகின்றன.
வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியை இலங்கை எதிர்கொள்கிறது. அத்தியாவ
சியப் பொருள்கள்கூட இல்லாத நிலை ஏற்பட்டு, நாடு நொடித்துப் போக ராஜபக்சே குடும்பத்தினரின் முறையற்ற ஆட்சிதான் காரணம் என்று இலங்கை மக்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்த்த தீப்பொறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. நாடெங்கும் நடந்த ஆர்ப்பாட்டங்களின் உச்சகட்டமாக அண்மையில் அதிபர் மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அத்து மீறி நுழைந்தனர். அங்கிருந்து தமது குடும்பத்தாருடன் மாலத் தீவுக்குத் தப்பிச் சென்ற கோத்தபாய, நேற்று முன்தினம் சவூதி விமானம் மூலம் சிங்கப்பூர்
வந்தடைந்தார். கோத்தபாயவுக்கு அடைக்கலம் தரவில்லை என்றும் அவர் தனிப்பட்ட முறையில் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் சிங்கப்பூர் அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது.

