ஏர் இந்தியா விமான வெடிகுண்டு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் கனடாவில்
சுட்டுக்கொல்லப்பட்டார். வேன்
கூவர் நகரில் தமது துணிக் கடைக்கு வெளியே ரிப்புதமன் சிங் மாலிக் தாக்கப்பட்டார்.
அவர் தமது காரில் இருந்தபோது துப்பாக்கிக்காரர்கள்
அவரைக் குறிவைத்துச் சுட்டதாக
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
ரிப்புதமன் சிங்கின் கழுத்தில் குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர் சம்பவ இடத்தில் மாண்டதாக கனடா காவல்துறை கூறியது. இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாக நம்பப் படுகிறது. துப்பாக்கிக்காரர்கள் பயன்படுத்திய வாகனம் சம்பவ இடத்துக்கு சில கிலோ மீட்டர் தூரம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதற்குத் தீவைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரி சர்ப்ஜீத் சங்கா தெரிவித்தார்.
அந்த வாகனத்துக்குத் தாக்குதல்காரர்களே தீவைத்துவிட்டு வேறொரு வாகனத்தில் ஏறி
தப்பித்திருக்கலாம் என்று கூறப்
படுகிறது. அந்த வாகனத்தை கனடா காவல்துறையினர் வலைவீசித் தேடுகின்றனர்.
ரிப்புதமன் சிங்கின் கொலைக்கு யார் காரணம் என்ற கேள்வி தற்போது அவ்வட்டார மக்களின் மனதில் மேலோங்கி இருக்கிறது.
நீண்டகாலமாக இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைக் களைய நடவடிக்கை எடுப்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரிப்புதமன் சிங் கடிதம் அனுப்பியது குறிப்பிடத் தக்கது.
1985ஆம் ஆண்டில் அயர்லாந்தின் கடலோரப் பகுதிக்கு மேல் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறியது. அதில் இருந்த 329 பயணிகள், விமானச் சிப்பந்திகள் அனைவரும் மாண்டனர்.
அதே சமயத்தில் ஜப்பானின் நரிட்டா விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்துக்குள் பயணப் பெட்டிகளை அடுக்கிக்கொண்
டிருந்தபோது குண்டு வெடித்தது. அதில் இரண்டு ஊழியர்கள் மாண்டனர். இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பயணப்பெட்டிகள் வேன்கூவர் நகரிலிருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. வெடிகுண்டு தாக்குதலுக்குக் காரணமானவர்களில் ஒருவர் என்று சந்தேகிக்கப்பட்ட ரிப்புதமன் சிங் மாலிக்கிற்கு எதிராக வழக்கு
விசாரணை நடைபெற்றது.
போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் 2005ஆம் ஆண்டில் ரிப்பு தமன் சிங் விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவிலிருந்து பிரிந்து
சீக்கியர்களுக்கெனத் தனிநாடு அமைக்க வேண்டும் என அக்
காலகட்டத்தில் காலிஸ்தான் இயக்கம் இலக்கு கொண்டிருந்தது. அந்த இயக்கத்தின் ஆதரவாளராக
ரிப்புதமன் சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1984ஆம் ஆண்டில் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்
களின் புனித பொற்கோயிலுக்குள் இருந்த காலிஸ்தான் போராளி
களுக்கு எதிராக இந்திய
ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதில் பலர் மாண்டனர். பொற்கோயில் பெருஞ்சேதம் அடைந்தது. அதற்குப் பழிதீர்க்கும் வகையில் ஏர் இந்தியா விமானம் தகர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

