பிரதமர் லீக்கு புருணையின் ஆக உயரிய விருது

பிரதமர் லீக்கு புருணையின் ஆக உயரிய விருது

1 mins read
bb9cf2bd-01af-41aa-a6a8-721d4bdbee65
-

புருணை சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு அந்நாட்டின் ஆக உயரிய குடும்ப விருது வழங்கப்பட்டுள்ளது.

1954ஆம் ஆண்டு புருணை சுல்தானால் ஏற்படுத்தப்பட்ட இந்த விருது, இதற்கு முன்னர் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் திரு யூசோஃப் இஷாக்கிற்கு 1960ஆம் ஆண்டும் சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூவிற்கு 1990ஆம் ஆண்டும் வழங்கப்பட்டது.

நேற்றைய நிகழ்வில் பிரதமர் லீயின் மனைவி ஹோ சிங்கிற்கு மெச்சத்தகுந்த முதன்மை விருது வழங்கப்பட்டது. புருணை சுல்தான் அரண்மனை யில் நேற்று மாலை இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சிங்கப்பூர் தலைவர்கள் தவிர இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கும் இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, அரச குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்கள் போன் றோரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக புருணை அரசாங்கம் இந்த விருதை வழங்கி வருகிறது.

மூன்று நாள் வருகையாக புருணை சென்ற திரு லீயும் அவரது மனைவியும் நேற்று முன்தினம் புருணை சுல்தான் ஹஸனல் போல்கியாவின் 76வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங் கேற்றனர்.

முன்னதாக, தம்புரோங் என்னும் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்களை பிரதமர் லீ சந்தித்தார். இது பற்றி அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்து இருந்தார்.