மக்கள் மனநலனைக் காக்க புதிய கட்டமைப்பு உதயம்

சிங்­கப்­பூ­ரில் எல்லா வயது மக்­களின் மனநல­னையும் பாது­காப்­

ப­தற்­காக நேற்று புதிய செயல்­திட்­டம் ஒன்று தொடங்­கப்­பட்­டுள்­ளது.

'எஸ்ஜி மன­ந­லக் கட்­டமைப்பு' என்ற அந்­தத் திட்­டத்­தின் முக்­கி­ய­மான ஓர் அங்­க­மாக சமூக நல்­வாழ்­வுக் குழுக்­கள் அமை­யும். பல குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் செயல்­படும் அந்­தக் குழுக்­களில் சமூ­கத் தொண்­டூ­ழி­யர்­களும் அடித்­தளத் தலை­வர்­களும் சமூ­க சேவை பங்­கா­ளி­க­ளு­டன் சேர்ந்து ஒன்று திரண்டு இருப்­பார்­கள்.

அவர்­கள் மன­ந­லப் பிரச்­சி­னை­களு­டன் போரா­டும் மக்­க­ளுக்கு ஆலோ­சனை கூறி, ஆத­ரவளித்து உத­வு­வார்­கள்.

அத்துடன், நல்­வாழ்­வு செயல்­திட்­டங்­க­ளை­யும் அவர்­கள் நிர்­

வ­கித்து நடத்­து­வார்­கள்.

புதிய கட்­ட­மைப்­பில் சமூகசேவை அமைப்­பு­கள், மன­நல ஆலோ­சனை அமைப்­பு­கள், போன்ற பங்­கா­ளித்­துவ அமைப்­பு­கள் இருக்­கும்.

கலா­சார, சமூக, இளை­யர் துறை துணை அமைச்­சர் ஆல்­வின் டான் அதற்­குத் தலைமை வகிப்­பார்.

புதிய கட்­ட­மைப்பை இந்த அமைச்சு மேற்­பார்­வை­யி­டும். மன உளைச்­சல், கவ­லை­க­ளு­டன் போரா டும் மக்­க­ளுக்கு அருகே இருந்து உத­வும் முதல் நிலை ஆத­ர­வா­ள­ராக அக்­கம்­பக்­கத்­தினரும் சமூ­கத்­தி­ன­ரும் இருப்­பார்­கள் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

நல்­வாழ்­வுக் குழு ஒவ்­வொன்­றும் அது அதற்கு உரிய அடித்­தள பிரி­வு­க­ளின் தேவைக்கு ஏற்ப செயல்­திட்­டங்­க­ளை­யும் இலக்­கு­களை­யும் கொண்­டி­ருக்­கும் என்று துணை அமைச்­சர் கூறி­னார்.

முன்­னோடி முயற்­சி­யாக அந்­தக் குழுக்­கள் முத­லில் பல அடித்­தள பிரி­வு­களில் பரி­சோ­தித்­துப் பார்க்­கப்­படும். பிறகு தேசிய அள­வில் விரி­வு­ப­டுத்­தப்­படும்.

எஸ்ஜி மன­ந­லக் கட்­டமைப்பு தொடக்க நிகழ்ச்சி நேற்று ஆசிய நாக­ரிக அருங்­காட்­சிக்­கூ­டத்­தில் நடந்­தது.

இந்­தக் கட்­ட­மைப்பு, 2020 ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட இளை­யர் மன­நல நல்­வாழ்வுக் கட்­ட­மைப்பு என்ற செயல்­திட்­டத்­தின் விரி­வாக்­க­மா­கும்.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக மன­ந­லப் பிரச்­சினை முக்­கி­ய­மா­ன­தாக தலை எடுத்­துள்­ளது.

மன­ந­லன் தொடர்­பில் தேசிய உத்­தியை உரு­வாக்க, அமைப்­பு­

க­ளுக்கு இடை­யி­லான மன­ந­லம், நல்­வாழ்வு சிறப்­புப் பணிக்­குழு சென்ற ஆண்­டில் அமைக்­கப்­பட்­டது.

நேற்­று தொடங்­கப்பட்ட புதிய கட்­டமைப்பு, அந்­தக் குழு­வின் பங்­கா­ளித்­துவ அமைப்­பா­கச் செயல்­படும்.

எஸ்ஜி கட்டமைப்பின் முக்கிய அங்கமாக நல்வாழ்வுக் குழுக்கள் செயல்படும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!