இந்திய அதிபர் தேர்தல் நாளை (ஜூலை 18) நடைபெறுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளார்கள். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு, 64, எதிர்க்கட்சி
களின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா, 84, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் பதிவாகும் வாக்கு களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (ஜூலை 21) எண்ணப்படும். ஆளும் கட்சி வேட்பாளரே வெற்றிபெறுவார் என்று தொடக்கம் முதலே கணிக்கப்பட்டு வருவதால் பெரிய திருப்பம் எதுவும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்னர் 50% வாக்குகளுடன் திரௌபதி முர்மு வெற்றிபெறுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 60 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது. பாஜகவை ஆதரிக்காத சிவசேனா, தெலுங்கு தேசம் போன்றவற்றோடு மேலும் சில மாநிலக் கட்சிகள் திருவாட்டி முர்முவை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளன.
அதனால், ஒவ்வொரு மாநிலமாகச் சென்று ஆதரவு திரட்டி வந்த எதிர்த்தரப்பு வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, மகாராஷ்டிர பயணத்தை ரத்து செய்துவிட்டார். எதிர்பாராதவிதமாக சிவசேனாவும் ஆளும் தரப்பு வேட்பாளரை ஆதரிக்க முடிவுசெய்ததால் திரு சின்ஹா பின்வாங்கினார். சிவசேனா வசம் 19 மக்களவை உறுப்பினர்களும் 3 மாநிலங்களவை உறுப்பினர்களும் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.
அதேநேரம், திருவாட்டி முர்மு கடந்த வியாழக்கிழமை மகாராஷ்டிரா சென்று பாஜக எம்எல்ஏ, எம்பிக்கள் உள்ளிட்டவர் களைச் சந்தித்து ஆதரவு திரட்டி னார்.

