செஸ் ஒலிம்பியாட் எனப்படும் உலக சதுரங்கப் போட்டி 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. உலக சதுரங்கக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டி இதுநாள்வரை இந்தியாவில் நடந்ததே இல்லை.
ஆனால் முதன் முதலாக இந்தி யாவில், அதுவும் உலக சதுரங்கப் புலியான விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தமிழ்நாட்டின் தலைநகர் அருகே மாமல்லபுரத்தில் இந்த மாதம் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது.
இந்த உலகப் போட்டியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க இருக்கிறார்.
இந்தப் போட்டியை மிக வெற்றி கரமான முறையில் நடத்தி அதன் மூலம் தமிழ்நாட்டை உலகம் உற்று நோக்கும்படி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். தமிழகத்தில் உலகப் போட்டி பர பரப்பு, மகிழ்ச்சி, ஊக்கம் அதிகமாகி வருகிறது.
தலைநகர் சென்னையும் மாமல்ல புரமும் சதுரங்கமயமாகி வருகின் றன. சென்னை நேப்பியர் பாலம் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சதுரங்கப் பலகை போல் நிறம் மாறி இருக்கிறது.
சென்னை உலக சதுரங்கப் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 2,000 சதுரங்க விளை யாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டியை விளம்பரப்படுத்து வதற்காக ஆஸ்கார் புகழ் ஏ ஆர் ரஹ்மான் இசையில் விளம்பரப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதை தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு இருக்கிறார். 'செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில், அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை' என்று ரஜினி குறிப்பிட்டு இருக்கிறார்.

