18 மாதங்களில் 2 பில்லியன் தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை

18 மாதங்களில் 2 பில்லியன் தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை

2 mins read
a9d42200-f823-4a74-a7ea-2c9d1bed01f5
ராஜஸ்தான் மாநில பிக்கானர் என்ற நகரில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு மாது கைப்பேசி சுயபட நிலையத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். படம்: இந்திய ஊடகம் -

இந்­தியா கொவிட்-19 தொற்­றைத் தவிர்த்­துக்கொள்­வ­தில் இமா­லய சாத­னை­யைப் படைத்து உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தக் கிரு­மிக்கு எதி­ரான இப்­போ­தைய ஒரே கவ­சம் என்று நம்­பப்­படும் தடுப்­பூசி மருந்தை 2 பில்லி­யன் (200 கோடி) முறை மக்­க­ளுக்­குப் போட்டு அசத்தி இருக்­கிறது.

இந்­தி­யா­வில் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி இயக்­கம் சென்ற ஆண்டு ஜன­வ­ரி­யில் தொடங்­கியது. வெறும் 18 மாதங்­களில் அது இந்தச் சாத­னையை நிகழ்த்தி உள்­ளது.

இதில் இன்­னும் ஒரு படி மேலாக தடுப்­பூசி இயக்­கத்­தின் வேகம் குறையவில்லை என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அதா­வது முதல் ஒன்­பது மாதங்­களில் 1 பில்­லி­யன் தடுப்­பூசி போடப்­பட்­டது. அடுத்த ஒன்­பது மாதங்­களில் அதே வேகத்­தில் மேலும் 1 பில்லியன் தடுப்­பூசி போடப்­பட்­ட­தாக அர­சாங்க அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

'இந்­தி­யா­வில் தயா­ரிப்­போம், உல­கிற்­காக தயா­ரிப்­போம்' என்ற இயக்­கம் உள்­ளிட்ட இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் இடை­விடா முயற்­சியே இந்­தச் சாத­னைக்கு முக்­கிய கார­ணம் என்று அதி­காரி­கள் தெரி­வித்தனர்.

நாட்­டில் கிட்­டத்­தட்ட பெரி­ய­வர்­கள் எல்­லா­ருமே முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருப்­ப­தா­க அவர்கள் கூறி­னர்.

"இந்­தி­யா­வில் தடுப்­பூசி இயக் கம் இது­வரை ஏழு கட்­டங்­களைக் கடந்து வந்­துள்­ளது.

"ஐரோப்பா முழு­வ­துமே மொத்தம் ஏறக்­கு­றைய 1.3 பில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன. அதை இந்­தியா விஞ்­சி­விட்­டது.

"இது ஒரு சாதனை. இந்­தியா கிட்­டத்­தட்ட 50 நாடு­க­ளுக்கு 230 மில்­லி­யன் தடுப்­பூசி மருந்தை ஏற்­று­மதி செய்­துள்­ளது. கைவசம் இன்­ன­மும் ஏறக்­குறயை 100 மில்­லி­யன் குப்பி மருந்து இருக்­கிறது.

"நாடு 18 மாதங்­களில் ஏறக்­குறைய 2.330 பில்­லி­யன் குப்பி தடுப்­பூசி மருந்தைத் தயா­ரித்­து உள்ளது" என்று உயர் அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 20,528 பேருக்குத் தொற்று உறுதி யானதாகவும் 49 பேர் உயிர் இழந்த தாகவும் இந்திய சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.