இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்

3 mins read

புதிய இலங்கை அதி­ப­ரைத் தேர்ந்­து எடுப்­ப­தி­லும் ராஜ­பக்­சேக்­க­ளின் செல்­வாக்­கில் இருந்து இடைக்­கால அர­சாங்­கத்தை விடு­விப்­ப­தி­லும் அந்­நாட்டு அர­சி­யல் கட்­சி­கள் தடு­மாறி வரு­கின்­றன.

இலங்­கை­யில் வர­லாறு காணாத பொரு­ளி­யல் நெருக்­க­டியை அர­சாங்­கம் கையாண்ட விதத்­தைக் கண்­டித்து பொங்கி எழுந்த மக்­கள் போராட்­டம் 100 நாள்­க­ளைக் கடந்துள்ளது.

ஆளும் கட்­சி­யின் ஆத­ர­வு­டன் புதிய அதி­பர் வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்­தப்­படக்­கூ­டிய ரணில் விக்­ர­ம­சிங்க, இலங்கை மக்­க­ளி­டையே பிர­ப­ல­மா­ன­வராக இல்லை. திரு கோத்­த­பாய ராஜபக்சேவைப்­போல இவ­ரும் பத­வி­யிலிருந்து விலக வேண்­டும் என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் விடாப்­ப­டி­யாகப் போராடு கின்­ற­னர்.

அதை­யும் மீறி திரு ரணில் விக்ரமசிங்க அதிபராக நிய­மிக்­கப்­பட்­டால், நாட்­டில் அமை­தி­யின்மை மேலும் மோச­ம் அடை­யும் சாத்­தி­யம் நில­வு­கிறது.

இந்­நி­லை­யில், இடைக்­கால அதி­ப­ரான திரு ரணில் நேற்று முன்­தி­னம் நாட்­டில் அவ­ச­ர­நி­லை­யைப் பிர­க­ட­னப்­படுத்தி உள்­ள­தாக அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் பின்­னே­ரத்­தில் வெளி­யிட்ட அறி­விப்­பில் தெரிவிக்கப்பட்டது.

"பொது­மக்­க­ளின் பாது­காப்பு, பொதுக் கட்­டொ­ழுங்கு, அத்­தி­யா­வ­சிய சேவை­களின் விநி­யோ­கம் போன்­ற­வற்­றைக் கருதி அவ­ச­ர­நி­லை­யைப் பிர­க­ட­னப்­படுத்து­வது உகந்த நட­வ­டிக்­கையே," என்று அந்த அறி­விப்­பில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

தனது செயல்­பா­டு­க­ளுக்கு எதி­ராக மக்­கள் எழுச்சி அடைந்­த­தைத் தொடர்ந்து, கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து இலங்கை அர­சாங்­கம் பல­முறை அவ­ச­ர­நி­லை­யைப் பிர­க­ட­னப்­ப­டுத்தி உள்­ளது.

திரு கோத்­த­பாய அதி­பர் பத­வி­யி­லி­ருந்து விலக வலி­யு­றுத்தி மக்­க­ளின் போராட்­டம் தீவி­ர­ம் அடைந்­த­தால், திரு கோத்­த­பாய நாட்­டை­விட்டு தப்பி ஓடினார்.

அதை­ய­டுத்து, திரு ரணில் கடந்த வாரம் இலங்­கை­யில் அவ­ச­ர­நி­லை­யைப் பிர­க­டனப்­ப­டுத்தி இருந்­தார்.

அவ­ரு­டைய அந்த உத்­த­ரவு மீட்­டுக்­கொள்­ளப்­பட்­டதா அல்­லது காலா­வ­தி­யா­கி­விட்­டதா அல்­லது, ஜூலை 15ஆம் தேதி இடைக்­கால அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்­ற­பின் திரு ரணில் அந்த உத்­த­ரவை மீண்­டும் பிறப்­பித்­துள்­ளாரா என்­பது பற்றித் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை. ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் இது­கு­றித்து கருத்து கேட்­ட­தற்கு திரு ரணில் அலு­வ­ல­கம் பதி­ல­ளிக்­க­வில்லை.

அண்­மை­யில் பிறப்­பிக்­கப்­பட்­டு உள்ள இந்த அவ­ச­ர­நி­லை­ பிரகடனத்தில் இடம்­பெ­றும் சட்ட வரம்பு குறித்து நேற்­றைய நில­வ­ரப்­படி அர­சாங்­கத்­தி­டம் இருந்து அறி­விப்பு எதுவும் வெளி­யா­க­வில்லை. எனி­னும், இதற்கு முன்பு அவ­ச­ர­நிலை நடப்­பில் இருந்­த­போது ஆர்ப்­பாட்­டங்­களை ஒடுக்கி அவற்­றில் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்ய ராணு­வத்­தி­னர் வீதி­களில் களமிறக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், இலங்­கைத் தலை­ந­கர் கொழும்­பில் நேற்­றுக் காலை நில­வ­ரம் அமை­தி­யாக இருந்­தது. வாக­ன­மோட்டி­களும் பாத­சாரி­களும் வீதி­களில் சென்ற வண்­ணம் இருந்­த­னர்.

நாட்டில் பசி, பட்டினி

நாட்­டில் மிக மோச­மான பொரு­ளி­யல் நெருக்­கடி நிலவுவதால், இலங்­கை­ மக்கள் பொருள்­களை வாங்­கு­வது, சாப்­பி­டு­வது, வேலை செய்­வது ஆகி­ய­வற்­றைக் குறைத்துக் கொண்­டு உள்­ள­னர்.

கடந்த ஜூன் மாத நில­வ­ரப்­படி, நாட்­டில் பண­வீக்­கம் 80.1 விழுக்­காட்டை எட்­டி­ உள்­ள­தாக அதி­கா­ர­பூர்வ புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

உலக உண­வுத் திட்­டத்­தைப் பொறுத்­த­மட்­டில், கிட்­டத்­தட்ட ஐந்து மில்­லி­யன் இலங்கை மக்­க­ளுக்கு உணவு உண்ண உதவி தேவைப்­படு­கிறது. இந்த எண்­ணிக்கை, நாட்­டின் மக்­கள்­தொகை 22 விழுக்­காடாகும்.

இதற்கிடையே, 'மக்கள் போராட்ட பிரஜைகள்' என்ற புதிய அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சில கும்­பல்­கள் போராட்­டத்தை தவ­றா­கப் பயன்­ப­டுத்த முயற்­சிப்­ப­தா­க­வும் மக்­க­ளின் விருப்­பங்­க­ளுக்­காக தொடர்ந்­தும் நிற்­கும் என­வும் மக்­கள் போராட்­டக் கட்சி, மக்­கள் அமைப்­பின் செய­லா­ளர் சானக பண்­டார தெரி­வித்­தார்.

எத்­த­கைய சவால்­கள் வந்­தா­லும் நாட்டின் வளர்ச்­சிக்­கா­க­வும் மக்­க­ளின் வளர்ச்­சிக்­கா­க­வும் முடிந்த அனைத்­தையும் செய்­வோம் என்­றார் அவர்.