பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள முதலாளிகள், செலவுக் குறைப்பு என்பதன் பேரில் எடுக்கும் சம்பள வெட்டு குறித்து ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து மனிதவள அமைச்சிடம் தெரியப்படுத்த வேண்டியதில்லை.
இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் சம்பள வெட்டு தொடர்பில் மாதந்தோறும் அமைச்சிடம் சராசரியாக எட்டு முறை முதலாளிகள் தெரிவித்து இருந்தனர். ஒப்புநோக்க, 2020 ஏப்ரலில் கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் தொடங்கியபோது, இந்த எண்ணிக்கை 1,713 ஆக உச்சத்தைத் தொட்டது.
கொவிட்-19 பெருந்தொற்று, ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பைக் கண்டறியவும் முதலாளிகளுக்கு உரிய நேரத்தில் உதவி வழங்கவும் 2020 மார்ச் மாதம் இந்த விதியை அமைச்சு அமல்படுத்தி இருந்தது.
இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றது அமைச்சு.

