வரலாறு காணாச் சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80ஐத் தொட்டது

வரலாறு காணாச் சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80ஐத் தொட்டது

2 mins read

இது­வரை இல்­லாத வகை­யில், அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு 80ஐத் தாண்­டி­யது. நேற்­று வணி­கம் தொடங்­கி­ய­தும் ஓர் அமெ­ரிக்க டால­ருக்கு 80.06 ரூபாய் என்ற அள­விற்­குச் சரிந்­ததை புளூம்­பெர்க் தர­வு­கள் காட்­டின.

அமெ­ரிக்­கா­வில் பண­வீக்­கம் அதி­க­ரித்து வரு­கிறது. வட்டி விகி­த­மும் உயர்த்­தப்­பட்­டுள்­ளது. அத்­து­டன், உல­கின் ஆகப் பெரிய பொரு­ளி­ய­லா­கத் திக­ழும் அமெ­ரிக்­கா­வில் பொரு­ளி­யல் மந்­த­நிலை ஏற்­ப­ட­லாம் என்ற அச்­ச­மும் நில­வு­கிறது.

இத­னால், அண்­மைய வாரங்­களாக முத­லீட்­டா­ளர்­கள் தங்­க­ளது முத­லீ­டு­களை டால­ருக்கு மாற்­று­வது அதி­க­ரித்­துள்­ளது.

அமெ­ரிக்க நாண­யக் கொள்கை கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ள­தால் இந்­தியா உள்­ளிட்ட வள­ரும் நாடு­களி­லி­ருந்து முத­லீ­டு­கள் வெளி­யே­று­வது அதி­க­மா­கி­யுள்­ளது.

இவ்­வாண்­டில் மட்­டும் 30.8 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை (S$43 பில்­லி­யன்) வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் இந்­தி­யா­வி­லி­ருந்து மீட்டுக்­கொண்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், வெளிப்­பு­றக் கார­ணங்­க­ளால்­தான் இந்­திய ரூபா­யின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரு­கிறது என்று இந்­திய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் நேற்று முன்­தி­னம் எழுத்து வழி­யாக அந்­நாட்டு நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

"ரஷ்யா - உக்­ரேன் போர், உயர்ந்து­வ­ரும் கச்சா எண்­ணெய் விலை, இறுக்­க­மான அனைத்­து­லக நிதிச் சூழல் ஆகி­ய­வையே அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு வீழ்ச்­சி­ய­டைய முக்­கி­யக் கார­ணங்­கள்," என்று திரு­வாட்டி நிர்­மலா சுட்­டி­னார்.

அதே நேரத்­தில், பிரிட்­டிஷ் பவுண்டு, ஜப்­பா­னிய யென், யூரோ ஆகிய நாண­யங்­க­ளுக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு வலு­வடைந்து இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தி­யா­வின் வணி­கப் பற்­றாக்­குறை, இதற்­கு­முன் இல்­லாத வகை­யில், சென்ற ஜூன் மாதம் 26.18 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ராக உயர்ந்­தது என்று கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்ட அதி­கா­ர­பூர்­வத் தர­வு­கள் காட்­டின. உயர்ந்­து­வ­ரும் கச்சா எண்­ணெய், நிலக்­கரி விலை­களே இதற்­குக் கார­ணம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

ரூபா­ய் மதிப்பு சரிந்து வரு­வதால் இறக்­கு­ம­திப் பொருள்­களுக்கு அதி­க கட்­ட­ணம் செலுத்த வேண்டி­ இ­ருக்­கும். அத­னால், அப்­பொ­ருள்­களின் விலை மேலும் உயரலாம். தொடர்ந்து அதி­க­ரித்­து­வ­ரும் பண­வீக்­கத்­தால் மக்­க­ளின் வாங்­கும் திறன் குறை­ய­லாம். இத­னால் தேவை குறைந்து, அது நாட்­டின் பொரு­ளி­ய­லி­லும் தாக்­கத்தை ஏற்­படுத்­தக்­கூ­டும்.

மாறாக, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வெளி­நா­டு­வாழ் இந்­தி­யர்­க­ளுக்கு நல்ல தக­வல். அவர்­கள் சொந்த ஊருக்­கு அனுப்பும் பணம், ரூபாய் மதிப்பில் அதிகமாக இருக்கும்.