இலங்கையின் புதிய அதிபராக ரணில் தெரிவு

இலங்கையின் புதிய அதிபராக ரணில் தெரிவு

1 mins read
8e4f91d6-49a7-4374-aa84-6acf82c63203
இலங்கையின் அடுத்த அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கோப்புப் படம்: இபிஏ -

இலங்கையின் அடுத்த அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமையன்று (20 ஜூலை) நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் 134 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க, இலங்கை பொதுஜன முன்னணியின் எம். பி. டலஸ் அழகப்பெரும, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

இவர்களில் ரணில் 134 வாக்குகளையும் டலஸ் 82 வாக்குகளையும் அநுரகுமார திஸநாயக்க 3 வாக்குகளையும் பெற்றனர்.

223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இருவர் நாளுமன்றத்துக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நால்வர் செல்லுபடியாகாத வாக்குகளைச் செலுத்தினர்.