இலங்கையின் 8ஆவது அதிபராக 73 வயது ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் தலைமை நீதிபதி ஜெயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஆறுமுறை பிரதமராகவும் ரணில் பதவி வகித்துள்ளார். 45 வருடங்கள் நாடாளுமன்ற அனுபவமும் கொண்டவர். இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அதிபருக்கான ரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதிபர் தெரிவுக்காக ரணில் விக்கிரமசிங்க , பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.
இவர்களில் ரணில் 134 வாக்குகளையும் டலஸ் 82 வாக்குகளையும் அநுரகுமார திஸநாயக்க 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

