பாத்தாமில் கோழிப் பண்ணை திட்டம்

பாத்தாமில் கோழிப் பண்ணை திட்டம்

2 mins read
23161633-0f3b-4484-8d55-e9279827bc53
லியோங் ஹப் விநியோக வளாகத்தில் இந்தோனீசியாவிலிருந்து தருவிக்கப்பட்ட உறைந்த கோழி இறைச்சியை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் நேற்று பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து தருவிக்கப்படும் உறைந்த கோழி­களுக்­கான தேவை தொடர்ந்து அதி­க­ள­வாக நீடித்­தால் பாத்­தாம் தீவில் புதிய பண்ணை ஒன்று அமைக்­கப்­பட்டு அதன் மூலம் சிங்­கப்­பூ­ருக்­குப் புதிய கோழி­கள் உற்பத்தியாகலாம். இது குறித்து சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தோனீ­சி­யத் தூதர் சூர்யோ பிராட்டோமோ நேற்று தக­வல் தெரி­வித்­தார்.

இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் உறைந்த கோழி­கள் கொண்­டு­வ­ரப்­ப­டத் தொடங்­கி­விட்­டன. இவ்­வாண்டு இறு­திக்­குள் கிட்­டத்­தட்ட 1,000 டன் கோழி சிங்­கப்­பூரை வந்­த­டை­யும் எனத் தாம் எதிர்­பார்ப்­ப­தாக திரு சூர்யோ குறிப்­பிட்­டார்.

இந்­தோ­னீ­சிய உற்­பத்­தி­யா­ளர்­கள் சில­ரு­டன் தாம் பேசியதாகவும் பாத்­தா­மில் ஒரு பண்ணை அமைக்க அவர்­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார். கோழி­க­ளுக்­கான தேவையை நிறு­வ­னங்­கள் அடுத்த ஆண்­டுக்­குள் அறிந்­து­கொண்டு அதற்கு ஏற்­பப் பண்­ணை­யின் அளவை உறு­தி­செய்­ய­லாம் என்று திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்­பிட்­டார்.

"பாத்­தா­மில் நாங்­கள் பண்­ணையை அமைத்­தால், புதிய கோழி­களை சிங்­கப்­பூ­ருக்­குள் கொண்டு­வரு­வ­தற்கு அதி­கக் காலம் பிடிக்­காது," என்­றார் அவர்.

இதற்­கிடையே, சிங்­கப்­பூரை வந்­த­டைந்த முதல் தொகுப்பு உறைந்த கோழி­கள் விற்­றுத் தீர்ந்து­விட்­ட­ன. கோழிச்­சோ­றுக் கடைக்­கா­ரர்­களே இந்த உறைந்த கோழி­களை வாங்­கி­யோ­ரில் பெரும்­பான்­மை­யி­னர் ஆவர். உறைந்த கோழி­க­ளுக்­கான அடுத்­த­டுத்த தொகுப்­பு­கள் வரும் வாரங்­களில் சிங்­கப்­பூரை வந்­த­டை­யும்.

லியோங் ஹப் விநி­யோக வளா­கத்­திற்கு நேற்­றுக் காலை வருகை தந்­தி­ருந்த நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மற்­றும் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன், இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து தருவிக்கப்படும் உறைந்த கோழிக்­கான தேவையை அர­சாங்­கம் கண்­கா­ணித்து வரு­வ­தா­கக் கூறி­னார்.

தேவைக்கேற்ப கோழிகளின் உற்பத்தியும் அதி­க­ரிக்­கும் என்­றார் அவர். இந்­நி­லை­யில் அமெ­ரிக்கா, தாய்­லாந்து, பிரே­சில், அர்­ஜெண்­டினா போன்ற நாடு­க­ளி­லி­ருந்து தாங்­கள் கொண்­டு­வ­ரும் கோழி­களும் இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து தாங்­கள் கொண்­டு­வ­ரும் உறைந்த கோழி­களும் வேறு­ப­டு­வ­தாக லியோங் ஹப் விநி­யோக நிறு­வ­னத்­தைச் சேர்ந்த திரு அல்­ஃபி­ரட் லீக் குறிப்­பிட்­டார்.

இந்­தோ­னீ­சி­யா­வின் உறைந்த கோழி தலா 2-2.3 கிலோ எடை கொண்­ட­தா­க­வும் மற்ற நாடு­களின் கோழி 1.5-1.6 கிலோ எடை கொண்­ட­தா­க­வும் அவர் சொன்­னார். அத்­து­டன் இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து கோழி­கள் சிங்­கப்­பூரை வந்­த­டைய, மூன்றே நாள்­கள்­தான் எடுக்­கும் என்­றும் மற்ற நாடு­க­ளி­லி­ருந்து கோழி வரு­வ­தற்கு 30 முதல் 60 நாள்­க­ளா­கும் என்­றும் அவர் சுட்டி­னார்.