இந்திய அதிபர் தேர்தல்: திரௌபதி முர்மு வெற்றி முகம்

இந்­தி­யா­வின் புதிய அதி­ப­ராக பாஜக தலை­மை­யி­லான கூட்­ட­ணி­யின் சார்­பில் போட்­டி­யிட்ட திரௌபதி முர்மு வெற்­றி­பெ­று­வது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­விட்­ட­தாக நேற்­றி­ரவு வரை­யி­லான நில­வ­ரங்­கள் தெரி­வித்­தன. இந்­திய அதி­பர் தேர்­த­லில் பதி­வான வாக்­கு­கள் நேற்று எண்­ணப்­பட்­டன. காலை 11 மணி­ய­ள­வில் வாக்கு எண்­ணிக்கை தொடங்­கி­யது.

தொடக்­கம் முதலே திரௌ­பதி முர்மு முன்­னிலை வகித்­தார்.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்­றி­ரவு சுமார் 9.30 மணி­வரை எண்­ணப்­பட்ட வாக்­கு­களில் திரௌ­பதி முர்மு சுமார் 71% வாக்­கு­க­ளைப் பெற்­றி­ருந்­தார். அச்­ச­ம­யம் ஆங்­கில அகர வரி­சைப்­படி 10 மாநி­லங்­களில் பதி­வான வாக்­கு­கள் மட்­டுமே எண்ணி முடிக்­கப்­பட்­டி­ருந்­தன. இரண்­டா­வது சுற்­றின் முடி­வில் திரௌ­பதி முர்­மு­வுக்கு 1,349 வாக்­கு­கள் கிடைத்­தன.

அவரை எதிர்த்து, காங்­கி­ரஸ் உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­க­ளின் சார்­பில் கள­மி­றங்­கிய வேட்­பா­ளர் யஷ் ­வந்த் சின்­ஹா­வுக்கு 537 வாக்­கு­கள் மட்­டுமே கிடைத்­த­தாக தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­தது.

எனி­னும், இரவு 9.30 மணி நில­வரப்­படி திரௌ­பதி முர்மு, பதி­வான மொத்த வாக்­கு­களில் 51 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்­று­விட்­ட­தாக அதி­கா­ர­பூர்­வ­மற்ற தக­வல் ஒன்றை இந்­திய ஊட­கங்­கள் வெளி­யிட்­டன.

இச்­செய்­தியை உறு­தி­செய்­யும் வித­மாக இரவு சுமார் 9.30 மணி­ய­ள­வில் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் 'நன்றி...ஜெய்­ஹிந்த்' எனப் பதி­விட்­டி­ருந்­தார் திரௌ­பதி முர்மு.

இதை­ய­டுத்து பிர­த­மர் மோடி, உள்­துறை அமைச்­சர் அமித்ஷா உள்­ளிட்­டோர் அவரை நேரில் சந்­திக்க இருப்­ப­தா­க­வும் ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!