மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பேருந்து கவிழ்ந்தது; 19 பேர் மருத்துவமனையில்

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பேருந்து கவிழ்ந்தது; 19 பேர் மருத்துவமனையில்

1 mins read
6282355e-e11a-4a8b-853a-a0cb8baf2343
-
multi-img1 of 3

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த இரண்டு அடுக்கு கவிழ்ந்ததில் 19 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஈப்போவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த அந்த பேருந்து மலேசியாவின் கோலாலம்பூரில் வியாழக்கிழமை (ஜூலை 21) பின்னிரவு 12.05 மணியளவில் விபத்துக்குள்ளானது.

ஜலான் தமன்சாரவில் ஓட்டுநர் வண்டி மீதுள்ள கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நேர்ந்தது. நேற்று 12.40 மணிக்கு விபத்தைப் பற்றி தகவல் அறிந்ததாக மலேசியா குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் பேருந்து சேவையளிக்கும் ஸ்ரீ மாஜூ எனும் மலேசிய நிறுவனம்தான் பேருந்தின் உரிமையாளர். விபத்தில் சிக்கிய 24 பயணிகளில் காயமடைந்த 19 பேர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பேருந்தில் இருந்த சிங்கப்பூரைச் சேர்ந்த ஆறு வயது சிறுமிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என சீன நாளிதழ் ஷின் மின் தெரிவித்துள்ளது. அச்சிறுமியை தவிர்த்து, மீதமுள்ள பயணிகள் அனைவரும் மலேசியர்கள் என நம்பப்படுகிறது.

மலேசியா ஊடகம் ஒன்றில் வெளியான காணொளியில் பேருந்து கவிழ்ந்திருப்பதும் அதன் முன்புற கண்ணாடி நொறுங்கியிருப்பதும் காணமுடிகிறது. அக்கண்ணாடியை அகற்றி பயணிகளை தீயணைப்பாளர்கள் காப்பாற்றியதாக மலேசியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.