உணவு நெருக்கடி: ஒருவழியாக தானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருந்த உக்ரேன், ரஷ்யா

உக்­ரே­னும் ரஷ்­யா­வும் இது­வரை தப்­பிப் போய்க்­கொண்­டி­ருந்த தானிய ஒப்­பந்­தம் ஒன்­றில் நேற்று கையெ­ழுத்­திட இருந்­தன.

கருங்­கடல் வழி­யாக தானிய ஏற்­று­ம­தி­களுக்கு முட்­டுக்­கட்டை ஏற்­பட்­டு உள்­ள­தால் உல­க­ள­வில் கடுமையான உணவு நெருக்­கடி நிலவி வரு­கிறது. இதைத் தணிக்க இந்த ஒப்­பந்­தம் உத­வும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த பிப்­ர­வ­ரி­யில் உக்­ரேன்­மீது ரஷ்யா படை­யெ­டுக்­கத் தொடங்­கி­ய­தில் இருந்து இவற்­றுக்கு இடையே எட்­டப்­படும் பெரிய அள­வி­லான முதல் ஒப்­பந்­தம் இது­வாகும். ரஷ்­யப் படை­யெ­டுப்பு கார­ண­மாக உல­க­ள­வில் உணவு விலை­கள் கிடு­கி­டு­வென உயர்ந்­து உள்­ளன.

இந்­நி­லை­யில், துருக்­கி­யின் இஸ்தான்­புல் நக­ரில் இடம்­பெற இருந்த இந்­தக் கையெ­ழுத்­துச் சடங்­கைப் பார்­வை­யிட ஐக்­கிய நாட்­டுத் தலை­மைச் செய­லா­ளர் ஆண்­டோ­னியோ குட்­டா­ரெஸ் நேற்று முன்­தி­னம் துருக்கி செல்ல இருந்­தார்.

"உல­க­ளா­விய உண­வுப் பாது­காப்­புக்கு மிக­வும் முக்­கி­ய­மான இந்த தானிய ஏற்­று­மதி உடன்­பாடு, இஸ்­தான்­பு­லில் கையெ­ழுத்­தா­கும். துருக்­கிய அதி­பர் ரெசிப் தய்­யிப் எர்­து­வான், ஐ.நா. தலை­மைச் செய­லா­ளர் குட்­டா­ரெஸ் முன்­னி­லை­யில் இது கையெ­ழுத்­தா­கும்," என்று துருக்­கிய அதி­பர் பேச்­சா­ளர் இப்ராகிம் கலின் குறிப்­பிட்­டார்.

உக்­ரே­னிய துறை­மு­கங்­களில் கிட்­டத்­தட்ட 25 மில்­லி­யன் டன் கோதுமை மற்­றும் இதர தானிய வகை­கள் பல வாரங்களாக தேங்கிக் கிடக்­கின்­றன.

இந்த வட்­டா­ரத்­தில் இருந்து கிட்டத்­தட்ட அனைத்து தானி­யங்­களும் கருங்­க­டல் வழி­யா­கத்­தான் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கிறது.

உல­கின் ஆகப்­பெ­ரிய தானிய உற்­பத்தி நாடு­க­ளான உக்­ரே­னுக்கும் ரஷ்­யா­வுக்­கும் இடை­யிலான போர் ஐந்து மாதங்­க­ளாக நீடித்து வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!