சிங்கப்பூரில் உள்ள தொழிற்சங்கங்கள் மாறிவரும் சூழலுக்கேற்ப திகழ்வதோடு புதிய சவால்களைச் சமாளிக்கத் தயாராக வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார். மேலும் ஊழியரணி மாற்றத்திலும் தொழிற்சங்கங்கள் ஈடுபடவேண்டும் என்றார் அவர்.
ஊழியர்களின் குரலைப் பிரதி பலிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அதேநேரம் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் காலத்திற்கேற்ப தன்னைத் தானே உருமாற்றிக் கொள்வது அவசியம் என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.
"என்டியுசி வலுவான அமைப்பாக நீடித்தால் நாம் சரியான திசையில் செல்கிறோம் என்ற நிம்மதி இருக்கும். அதன்மூலம் சிங்கப்பூர் வெற்றிப்பாதையில் தொடர்ந்து நடைபோடும்," என்று என்டியுசியின் புதிய பணிக்குழு தொடக்க நிகழ்வில் அவர் தெரிவித்தார்.
வேலை, வாழ்க்கை தொடர்பான விருப்பங்களை இளையர்கள் நன்கு புரிந்துகொள்ளவும் அவர்
களின் வாழ்க்கைத்தொழிலுக்கு உதவவும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) நேற்று அந்தப் பணிக்குழுவை தொடங்கியது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக திரு வோங் பங்கேற்றுப் பேசினார்.
இளையர்கள் தங்களது இலக்குகள் பற்றி, குறிப்பாக வேலை, நிதி மற்றும் மனநலனில் கூடுதல் விவரங்களைப் பெறும் முயற்சிகளில் 10,000 இளையர்களை இந்தப் பணிக்குழு ஈடுபடுத்தும். அவர் கள் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருப்பர்.
பணிக்குழுவின் தலைவராக என்டியுசி உதவித் தலைமைச் செயலாளர் டெஸ்மண்ட் சூ இருப்பார். என்டியுசி இளையர் பிரிவின் நிர்வாகச் செயலாளர் வெண்டி டான் குழுவை வழிநடத்துவார்.
இளையர்களை ஈடுபடுத்தும் அம்சங்களில் 'யூத் ஹப்' என்னும் கண்காட்சி ஒன்று நடத்தப்படும். இதில் பங்கேற்போர் வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான பயிற்சியில் ஈடுபடுவர்.
மேலும், புதிய வேலை அல்லது உள்ளகப் பயிற்சி ஆகியவற்றில் எப்படி ஈடுபடுவது என்பதற்கான உதவிக்குறிப்புகள் அவர்களுக்கு இந்தக் கண்காட்சி யில் வழங்கப்படும்.
பள்ளிக்கூடங்களிலும் இளையருக்கான வெளிப்புறப் பகுதிகளிலும் கண்காட்சி நடத்தப்படும். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளோர் www.youthtaskforce.sg என்னும் இணையத்தளத்தை நாடலாம். இளையர்களிடம் இருத்து கருத்துகளைத் திரட்ட ஆய்வுகள், கவனக்குழு விவாதங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளுக்கும் பணிக்குழு ஏற்பாடு செய்யும்.
வேலையிலும் வாழ்க்கையிலும் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்
படுத்துவது என இளையர்களுக்கு இது சொல்லித்தர எண்ணுகிறது.
ஓராண்டு காலத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளில் இளையர்களை ஈடுபடுத்திய பின்னர், அவர்
களுக்கு இன்னும் சிறந்த முறையில் எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பான கருத்துகளையும் பரிந்துரைகளையும் குழு திரட்டும்.
இளையர் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு அரசாங்க அமைப்புகள், உயர்கல்வி நிலையங்கள், சுயஉதவிக் குழுக்கள், இளையர் குழுக்கள் போன்றவற்றுடன் பணிக்குழு பங்காளித்துவத்தை ஏற்படுத்தும்.
ஏட்டுக்கல்வி தவிர்த்து விளையாட்டு, கலைகள் மற்றும் தொழில்முனைவர் ஆகியவற்றில் விருப்பம் உள்ள இளையர்களையும் பணிக்குழு தொடர்புகொண்டு அதற்கான முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்தும்.
தொடக்க காலத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிய நிலையில் இரண்டாம் வாய்ப்பு தேவைப்படும் மாணவர்களும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
பணிக்குழு தொடக்க நிகழ்வில் உரையாற்றிய என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், "வருங்காலத்தில் நமது ஊழியர் அணியில் இளையர்கள் அதிகம் இடம்பெற்று இருப்பார்கள்," என்றார்.
"உள்ளூரிலும் உலக அள
விலும் சவால்கள் இருக்கும் நிலையில் நமது இளையர்களின் வாழ்க்கைத்தொழில் தேவைகளை அறிந்து அவர்களுக்கு என்டியுசி உதவிக்கரம் நீட்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கலாம்," என்றார் திரு இங்.
இவ்வாண்டு 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட 2,039 இளையர்களிடம் கருத்து திரட்டப்பட்டது. பல்வேறு ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
ஐந்தில் ஓர் இளையர் வேலைவாய்ப்பில் சவால்களை எதிர்நோக்குவதும் வாழ்க்கைத்தொழில் வழிகாட்டுதல்கள், திட்டமிடலுக்கான உதவி ஆகியன அவர்களுக்குத் தேவைப்படுவதும் ஆய்வுகளில் தெரியவந்தது.
வேலைவாய்ப்பு மற்றும் வளப்பம் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக ஆய்வுகளில் பங்கேற்றோரில் 56% இளையரும் நிதிச் சிரமத்தை எதிர்நோக்கு
வதாக 54 விழுக்காட்டினரும் மன
நலம் தொடர்பான சவால்கள் இருப்பதாக 52 விழுக்காட்டினரும் தெரிவித்தனர்.
புதிய பணிக்குழு தொடக்க நிகழ்வில் லாரன்ஸ் வோங் வலியுறுத்து

