குழந்தைகளை தொற்றிய குரங்கம்மை

குழந்தைகளை தொற்றிய குரங்கம்மை

1 mins read

அமெரிக்காவில் இரு குழந்தைகளிடம் குரங்கம்மை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாநிலத்தில் 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தை ஒன்றிடமும் மற்றோர் இடத்தில் ஒரு கைக்குழந்தையிடமும் குரங்கம்மை அறிகுறிகள் காணப்பட்டன. இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் என்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு அம்மை பரவி இருக்கலாம் என்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் (சிடிசி) கூறியது.

பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளும் நல்ல உடல்நிலையில் இருப்பதாக வும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அது

தெரிவித்தது.

பெரியவர்களுக்கு மட்டுமே குரங்கம்மை தொற்றும் என கூறப்பட்டு வந்த நிலையில், முதன் முதலாகப் பிள்ளைகளிடம் அந்தத் தொற்று கண்டறி யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடு களில் குரங்கம்மை பரவிவிட்டது. கடந்த வாரம் புதிதாக

6 நாடுகளுக்குப் பரவியது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் 14,000க்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள

நிலையில், ஆப்பிரிக்கா வில் ஐவர் மாண்டுவிட்ட னர்.

அமெரிக்காவில் 2,891 பேரிடம் குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 99 விழுக்காட் டினர் ஒருபாலினப் புணர்ச்சியில் ஈடுபட்ட ஆண்கள் என சிடிசியின் துணை இயக்குநர் டாக் டர் ஜெனிஃபர் மெக் குயிஸ்டன் கூறியுள்ளார்.