சதுரங்கப் போட்டியை வரவேற்க வேட்டி, சட்டையுடன் 'தம்பி'

சதுரங்கப் போட்டியை வரவேற்க வேட்டி, சட்டையுடன் 'தம்பி'

1 mins read
239804c4-80bc-41ee-b566-3cb8e2c1dc4c
-

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் வியாழக்கிழமை (ஜூலை 28) தொடங்க இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அதிகாரபூர்வ சின்னமாக 'தம்பி' என்ற பெயரில் வேட்டி, சட்டை அணிந்த சதுரங்கக் குதிரை உருவாக்கப்பட்டுள்ளது. பிரபலமான பேருந்து நிறுத்தங்களிலும் முக்கியமான சாலைகளின் ஓரத்திலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் இந்த 'தம்பி' சின்னம் வைக்கப்பட உள்ளது. இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு ஜியார்ஜியாவில் 43வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னமாக கறுப்புக் கண்ணாடி, கழுத்துப் பட்டை அணிந்த பச்சைநிற ஆமை இருந்தது. படம்: இந்திய ஊடகம்