சிங்கப்பூர் அதன் பொது அம்சங்
களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நாட்டின் செழுமை அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் பலனைத் தர வேண்டும் என்றும் துணைப்
பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று வலியுறுத்தினார்.
அவ்வாறு ஏற்படாவிடில் சில நாடுகளில் நிலவுவதைப் போல மக்களிடையே பிளவு ஏற்படக்
கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
"அத்தகைய நிலை சிங்கப்பூரில் ஏற்படக்கூடாது. சக நாட்டவர் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கினால் நமது நாடு நிலைகுலைந்துவிடும்," என்றார் திரு வோங். நேற்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் நடைபெற்ற ஒன்பீப்பள்.எஸ்ஜி வருடாந்திர ஹார்மனி வொர்க்ஸ்! மாநாட்டில் ஏறத்தாழ 200 இளையர்களிடம் திரு வோங் இதுகுறித்து உரையாற்றினார். நாட்டு மக்கள் வெவ்வேறு பிரிவு
களாகப் பிரிந்து மாற்று கருத்துகள் கொண்டோரைப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் அதன் விளைவாக ஏற்படக்கூடிய
ஆபத்துகளை திரு வோங் மேற்கோள்காட்டினார்.
"நாம் கவனமாக இல்லாவிடில் ஒரே மாதிரியான கருத்துகள் கொண்டோருடன் மட்டுமே பழகும் வழக்கம் ஏற்பட்டுவிடும். அப்போது மாறுபட்ட கருத்துகளைக் கொண்டோரைப் புரிந்துகொள்வது சிரமமாகிவிடும்," என்றார் அவர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புப் பேட்டைகள், உணவு அங்காடி நிலையங்கள், பள்ளிகள், தேசிய சேவை போன்ற சிங்கப்பூரின் பொது அம்சங்கள் நாட்டு மக்களை ஒன்றிணைப்பதாக அவர் தெரி வித்தார்.
ஆனால் தற்போது பலர் ஒரே மாதிரியான கருத்துகளைக் கொண்டோருடன் மட்டுமே சமூக ஊடகம் வாயிலாக தொடர்புகொள்வதால் பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்டவர்கள்
ஒன்றிணைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மைய ஆய்வின்படி, மூன்றில் ஓர் அமெரிக்கருக்கு மட்டுமே சக நாட்டவர் மீது நம்பிக்கை இருப்பதாக தெரியவந்துள்ளது என்றார் திரு வோங். இதுவே 20 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றில் இரு அமெரிக்கர்கள் தங்கள் சக நாட்டவர்களை நம்பினர்.
இப்படி ஒரு நிலை சிங்கப்பூரில் ஏற்படவே கூடாது என்று மாநாட்டில் கலந்துகொண்ட இளையர்
களிடம் திரு வோங் கூறினார்.
"பின்னணி எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள்," என்றார் அவர்.

