மலேசியாவின் பேராக் மாநிலத்தில் மொத்தம் 48 சுவாசத் தொற்றுக் குழுமங்கள் பதிவானதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்
துறைக் குழுத் தலைவர் முகம்மது அக்மால் கமாருதீன் தெரிவித்துள்ளார்.
அந்த 48 குழுமங்களில் நான்கு குழுமங்களில் மட்டுமே பாதிப்பு தொடர்வதாக அவர் கூறினார். சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
"சுவாசத் தொற்றுக் குழுமங்களில் 83.3 விழுக்காடு, அதாவது 40 குழுமங்கள் உயர்நிலைப்
பள்ளிகளுடன் தொடர்புடையவை.
"அதனைத் தொடர்ந்து, தொடக்கப்பள்ளிகள், பாலர் பள்ளி கள், சமயப் பள்ளிகள், தொழில்துறை பயிற்சி மையங்கள் ஆகியவை அதிகம் பாதிப்படைந்துள்ளன.
"பிற இடங்களில் நான்கு குழுமங்கள் பதிவாகி உள்ளன," என்று முகம்மது அக்மால் தெரிவித்தார்.
மலேசியாவில் தற்போது சுவாசத் தொற்று, காய்ச்சலுடன் தொடர்புடைய நோய்கள் ஆகியவற்றால் சிறுவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மலேசியப் பள்ளிகளில் கொவிட்-19 கிருமித்தொற்று, காய்ச்சல் தொடர்பான நோய்
களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தால் அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தயாராகி வருவதாக மலேசியக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்சி ஜிடின் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்
திருந்தார்.
"சுவாசத் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இருப்பினும், உட்புறங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று பேராக் மாநில சுகாதாரத்துறை நினைவூட்டுகிறது. கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். அல்லது கை சுத்தி
கரிப்பானைப் பயன்படுத்தி கை
களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
"பேராக்கில் நிலைமையையும் சுவாசத் தொற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் மாநில சுகா
தாரத்துறை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும்," என்றார் முகம்மது அக்மால்.
சுவாசத் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும் என்று அவர் பேராக் மக்களுக்கு
அறிவுறுத்தினார்.

