காட்டுமிராண்டித்தனம் எனச் சாடிய ஸெலன்ஸ்கி; ரஷ்யா மறுப்பு

காட்டுமிராண்டித்தனம் எனச் சாடிய ஸெலன்ஸ்கி; ரஷ்யா மறுப்பு

2 mins read
bf781f44-0471-4507-b082-651fd47b3981
-

உக்­ரே­னின் ஒடேசா துறை­மு­கத்­தைக் குறி­வைத்து நேற்று முன்­

தி­னம் ஏவு­கணைத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

இந்­தத் தாக்­கு­த­லுக்கு ரஷ்­யா­தான் கார­ணம் என்­றும் ரஷ்யா காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மாக நடந்­து­கொள்­கிறது என்­றும் உக்­ரேன் அதி­பர் வொலோ­டி­மிர் ஸெலென்ஸ்கி சாடி­யுள்­ளார்.

தானி­யங்­க­ளைப் பெரு­ம­ள­வில் ஏற்­று­மதி செய்­யும் நாடு­களில் உக்­ரே­னும் ஒன்று. உக்­ரே­னுக்கு எதி­ராக ரஷ்யா படை­யெ­டுத்து பல மாதங்கள் ஆகி­விட்­டன. போர் இன்­ன­மும் முடி­வுக்கு வராத நிலை­யில், கோது­மைக்­காக உக்­ரேன் மற்­றும் ரஷ்­யாவை அதி­கம் நம்­பி­யி­ருக்­கும் ஆப்­பி­ரிக்க நாடு­களில் உணவுப் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது.

இத­னால் அந்­நா­டு­களில்

உண­வுப்­பொ­ருள்­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ளது.

இதற்­குத் தீர்வு காணும் வகை­யில் தானிய ஏற்­று­ம­தி­யைத் தொடர உக்­ரேன் முடி­வெ­டுத்­தது. ஒடேசா துறை­மு­கத்­தி­லி­ருந்து பிற நாடு­

க­ளுக்­குத் தானி­யங்­கள் அனுப்­பி­வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தானி­யங்­களை ஏற்­றிச் செல்­லும் கப்­பல்­கள் உக்­ரே­னிய துறை

­மு­கங்­களில் இருக்­கும்­போது அவ்­வி­டங்­க­ளைக் குறி­வைத்து தாக்­கு­தல்­கள் நடத்­தப்­போ­வ­தில்லை என்று நேற்று முன்­தி­னம் ரஷ்யா உறுதி அளித்­தது. ஆனால் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தி­டப்­பட்டு சில மணி நேரங்­க­ளி­லேயே ஒடேசா துறை­

மு­கத்தை நோக்கி நான்கு ஏவு­

க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­ட­தாக

உக்­ரே­னிய ராணு­வம் கூறி­யது.

அவற்­றில் இரண்டு இலக்கை அடைந்­தன. மற்ற இரண்டு ஏவு­

க­ணை­க­ளை­யும் உக்­ரே­னி­யத் தற்­காப்­புப் படை சுட்டு வீழ்த்­தி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது.

ஏவு­க­ணை­கள் துறை­மு­கத்­தில் விழுந்து வெடித்­த­போ­தி­லும் பெரும் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை என்று உக்­ரே­னிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இந்­தத் தாக்­கு­தல்­க­ளுக்கு உலக நாடு­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன. உல­க­ளா­விய உணவு நெருக்­க­டியை ரஷ்யா மோச­மாக்­கு­வ­தாக அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன் குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.

"மூர்க்­கத்­த­ன­மாக நடந்­து­கொள்­வதை ரஷ்யா நிறுத்­திக்­கொள்ள வேண்­டும். ஒப்­பந்­தத்­துக்கு உட்­பட்டு அது நடந்­து­கொள்ள வேண்­டும்," என்று அவர் தெரி­வித்­தார்.

ஒடேசா துறை­மு­கத் தாக்­கு­தல் குறித்து ரஷ்யா இன்­ன­மும் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை வெளி­யி­ட­வில்லை. ஆனால் தாக்­கு­த­லுக்­கும் தங்­க­ளுக்­கும் தொடர்பில்லை என்று ரஷ்ய அதி­கா­ரி­கள் தெரி­வித்­தி­ருப்­ப­தாக ஒப்­பந்­தத்­துக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்த துருக்கி கூறி­யது.

தாக்குதல் காரணமாக மூண்ட தீயை அணைக்கும் உக்ரேன் படையினர். படம்: ஏஎஃப்பி