2008 நவம்பருக்குப்பின் பணவீக்கம் புதிய உச்சம்

2008 நவம்பருக்குப்பின் பணவீக்கம் புதிய உச்சம்

2 mins read

சென்ற ஜூன் மாதத்­தில் விலை­வாசி உயர்வு தொடர்ந்­ததை அடுத்து, ஆண்டு அடிப்­ப­டை­யி­லான மூலா­தா­ரப் பண­வீக்­கம் 4.4 விழுக்­காட்டை எட்­டி­யது.

தங்­கு­மி­டம், தனி­யார் போக்­கு­வ­ரத்­துச் செல­வு­க­ளைத் தவிர்த்த மூலா­தரப் பண­வீக்­கம், 2008 நவம்­பர் மாதத்­திற்குப் பிறகு இந்த அள­விற்கு உயர்ந்­தி­ருப்­பது இதுவே முதன்­முறை.

முன்­ன­தாக, ஜூன் மாதத்­தில் மூலா­தா­ரப் பண­வீக்­கம் 3.8 விழுக்­கா­டாக இருக்­கும் என்று யுஓபி வங்­கி­யும் 3.9 முதல் 4.5 விழுக்­காட்­டிற்­குள் இருக்­கும் என்று புளூம்­பெர்க் நிறு­வ­ன­மும் கணித்­தி­ருந்­தன.

கடந்த ஜூன் மாதத்­தில் ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் உயர்வு கண்­டது. ஆண்டு அடிப்­ப­டை­யில், அது 6.7 விழுக்­கா­டாக உயர்ந்­தது. தனி­யார் போக்­கு­வ­ரத்து, தங்­கு­மி­டச் செல­வு­களின் அதி­க­ரிப்பே இதற்­குக் கார­ணம் எனக் கூறப்­பட்­டது.

இது, புளூம்­பெர்க்­கின் 5.8%, யுஓபி வங்­கி­யின் 6.2% என்ற கணிப்­பு­களை மிஞ்­சி­யது.

இத­னை­ய­டுத்து, ஆண்டு முழு­மைக்­கு­மான முன்­னு­ரைப்­பு­களும் திருத்­தப்­பட்டு, உயர்த்­தப்­பட்­டுள்­ளன.

இவ்­வாண்­டில் ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 5 முதல் 6 விழுக்­காட்­டிற்கு இடைப்­பட்­டும் மூலா­தா­ரப் பண­வீக்­கம் 3 முதல் 4 விழுக்­காட்­டிற்கு இடைப்­பட்­டும் இருக்­கும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மே மாதம் 4.5 விழுக்­கா­டாக இருந்த உண­வுப் பண­வீக்­கம் அத­னை அ­டுத்த ஜூன் மாதத்­தில் 5.4 விழுக்­கா­டாக அதி­க­ரித்­தது. சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் நேற்று வெளி­யிட்ட தர­வு­கள் இத­னைக் காட்­டின.

உணவு சேவை­கள் மற்­றும் சமைக்­கப்­ப­டாத உண­வுப்­பொ­ருள்­க­ளின் விலை உயர்வே இதற்­குக் கார­ண­மாகக் கூறப்­பட்­டது.

விடு­மு­றைக்­கா­லச் செல­வு­களும் விமா­னக் கட்­ட­ணங்­கள் உள்­ளிட்ட போக்­கு­வ­ரத்­துச் செல­வு­களும் அதி­க­ரித்­த­தால் சேவை­க­ளுக்­கான பண­வீக்­கம் 3.4 விழுக்­கா­டாக ஏற்­றம் கண்­டது.

சில்­லறை மற்­றும் இதர பொருள்­களைப் பொறுத்­த­மட்­டில், மே மாதத்­தில் 1.8 விழுக்­கா­டாக இருந்த பண­வீக்­கம் 3.1 விழுக்­கா­டாக அதி­க­ரித்­தது. மருந்­துப்­பொ­ருள்­கள், ஆடை­கள், காலணி­கள் போன்­ற­வற்­றின் விலை­யேற்­றம் இதற்கு வித்­திட்­டது.

கடந்த ஜூன் மாதத்­தில் மின்­சா­ரம் மற்­றும் எரி­வா­யுக் கட்­ட­ணங்­களும் 20% வரை கூடின.

வீட்டு வாடகை கூடி­ய­தால் தங்­கு­மி­டப் பண­வீக்­கம் 4.2 விழுக்­கா­டாக உயர்ந்­தது. அது­போல, கார் விலை­களும் எரி­பொ­ருள் செல­வு­களும் கூடி­ய­தால் தனி­யார்ப் போக்­கு­வ­ரத்­துச் செல­வு­கள் 21.9% கூடின.

வரும் மாதங்­க­ளி­லும் பண­வீக்க நெருக்­கடி நீடிக்­கும் என்று நாணய ஆணை­யமும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் தெரி­வித்­துள்­ளன.

மூலா­தா­ரப் பண­வீக்­கம் மூன்­றாம் காலாண்­டில் உச்­சத்தை எட்­டும் என்­றும் அதன்­பின்­னர் தணி­யத் தொடங்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கார் விலை, தங்­கு­மி­டச் செலவு அதி­க­ரிப்பு இவ்­வாண்­டில் தொடர்ந்து நீடிக்­கக்­கூ­டும்.