நான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டிறுதிக்குள் கொவிட்-19 தடுப்பூசி

நான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டிறுதிக்குள் கொவிட்-19 தடுப்பூசி

2 mins read

ஆறு மாதம் முதல் நான்கு வயது வரைப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு இவ்­வாண்டு இறு­திக்­குள் கொவிட்-19 தடுப்­பூசி தயா­ரா­க­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

"ஆறு மாதங்­களில் இருந்து நான்கு வயது வரை­யி­லான குழந்­தை­க­ளுக்­கான கொவிட்-19 தடுப்­பூ­சி­களை அறி­மு­கப்­படுத்­து­வ­தற்­குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை சுகா­தார அமைச்சு எடுத்து வரு­கிறது. இவ்­வாண்­டின் நான்­காம் காலாண்­டில் அதற்கு ஆயத்­த­மாக இலக்கு கொண்­டுள்­ளோம்," என்று சுகா­தார அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.

கடந்த இரு மாதங்­களில் நான்கு வய­திற்­குட்­பட்ட இரண்டு குழந்­தை­கள் கொவிட்-19 தொற்­றால் மாண்­டு­போ­யி­னர்.

நான்கு வய­திற்­குட்­பட்ட பிள்­ளை­கள் கொவிட்-19 தொற்­றால் உயி­ரி­ழக்­கும் விகி­தம், நிமோ­னியா, இன்­ஃபு­ளு­வன்சா போன்ற தொற்­று­நோய்­க­ளு­டன் ஒப்­பி­டும் வகை­யில் இருப்­ப­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

"நான்கு வய­திற்­குட்­பட்ட குழந்­தை­களைப் பொறுத்­த­வரை, இவ்­வாண்­டில் கொவிட்-19 தொற்று உயி­ரி­ழப்பு விகி­தம் 100,000 பேருக்கு மூன்று பேர் என்ற அள­வில் இருக்­கிறது. ஒப்­பு­நோக்க, 40 மற்­றும் அதற்­கு­மேல் வய­து­டை­யோ­ரில் இவ்­வி­கி­தம் 100,000 பேருக்கு 99 பேர் என்ற அள­வில் உள்­ளது," என்று அமைச்சு தெரி­வித்­தது.

கொவிட்-19 பர­வ­லுக்­கு­முன், 2018, 2019ஆம் ஆண்­டு­களில் 100,000 பேருக்கு 3.1 பேர் என்ற விகி­தத்­தில் நான்கு வய­திற்­குட்­பட்ட குழந்­தை­கள் நிமோ­னி­யா­வா­லும் இன்­ஃபு­ளு­வன்­சா­வா­லும் மாண்­டு­போ­ன­தாக அமைச்சு கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் இது­வரை கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 1.7 மில்­லி­யன் பேரில், கிட்­டத்­தட்ட 64,000 பேர், அதா­வது 3.9 விழுக்­காட்­டி­னர் ஐந்து வய­திற்­குட்­பட்ட பிள்­ளை­கள்.

அவர்­களில் பெரும்­பா­லோர் வீட்­டி­லி­ருந்தே குண­ம­டைந்­த­தா­க­வும் 0.022 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே செயற்­கை­யாக உயிர்­வாயு அளிக்­கப்­பட வேண்டியிருந்­தது அல்­லது மருத்­து­வ­மனை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் அனு­ம­திக்­கப்­பட வேண்­டி­யி­ருந்­தது என்றும் அமைச்சு தெரிவித்தது.