எளிதாக வாக்களிக்க ஏற்பாடு

எளிதாக வாக்களிக்க ஏற்பாடு

2 mins read

இனி­வ­ரும் தேர்­தல்­களில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வாக்­க­ளிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வச­தி­ய­ளிக்­க அஞ்­சல் கட்­ட­ணம் செலுத்­தப்­பட்ட வாக்­குச்­சீட்டு உறை­கள் அனுப்பி வைக்­கப்­படும் என்று சிங்­கப்­பூ­ரின் தேர்­தல் துறை தெரி­வித்­துள்­ளது.

மேலும், வாக்­கா­ளர்­கள் திருப்பி­ அனுப்­பும் அந்த உறை­கள் தேர்­தல் துறையை அடைந்­து­விட்­டதை உறு­தி­செய்­யும் ஒப்புகைச் சீட்டு வழங்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வாக்­க­ளிப்­ப­வர்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­படும் உறை ஒவ்­வொன்­றி­லும் தனித்­து­வ­மான கியூ­ஆர் குறி­யீடு இருக்­கும் என்­றும் அதில் வாக்­கா­ளர்­க­ளின் தனிப்­பட்ட விவ­ரங்­கள் இடம்­பெற்­றி­ருக்­காது என்­றும் தேர்­தல் துறை நேற்று தெரி­வித்­தது.

அடையாளத்தை உறுதிசெய்ய வும் வாக்குச்சீட்டையும் அதற்கான உறையையும் பதிவிறக்கம் செய்ய வாக்காளர்கள் தங்களது சிங் பாஸைப் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் துறை கூறியது.

தனித்துவமான 'கியூஆர்' குறி யீடு பாதுகாப்பு அம்சத்துடன் வாக்காளர் களின் கையொப்பத்தை உறுதிசெய்யும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும்.

வெளிநாடுகளிலிருந்து வாக்களிக்க பதிவு செய்தபோது அளித்த கையொப்பத்துடன் புதிய கையொப்பத்தை அந்தத் தொழில் நுட்பம் ஒப்பிட்டு உறுதிசெய்யும் என்றது தேர்தல் துறை.

செல்­லு­ப­டி­யா­கக்­கூ­டிய 'கியூ­ஆர்' குறி­யீ­டு­க­ளைக் கொண்ட வாக்­குச்­சீட்டு உறை­களை மட்­டுமே தேர்­தல் துறை ஏற்­றுக்­கொள்­ளும். ஒரு வாக்­கா­ள­ருக்கு ஒரு வாக்­குச்சீட்டு என்­பதை இது உறுதிசெய்­யும்.

அதே­வேளை சேத­ம­டைந்த, திறக்­கப்­பட்ட கடித உறை­கள், ஒரே மாதி­ரி­யான கியூ­ஆர் குறி­யீட்­டைக் கொண்ட பல கடித உறை­கள், ஒரே மாதிரி இல்­லாத கையொப்­பங்­கள், ஒன்­றுக்­கும் அதி­க­மான வாக்­குச்சீட்­டு­க­ளைக் கொண்ட உறை­கள் ஆகி­யன நிரா ­க­ரிக்­கப்­படும்.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வாக்­க­ளிப்­ப­வர்­க­ளுக்­கும் தாதிமை இல்­லங்­க­ளி­லி­ருந்து வாக்­க­ளிப்­ப­வர்­

க­ளுக்­கு­மான புதிய வாக்­க­ளிப்பு ஏற்­பா­டு­கள் பற்றி கிடைத்த கருத்­து­கள் குறித்­தும் தேர்­தல் துறை தக­வல் அளித்­தது.

13 அர­சி­யல் கட்­சி­கள், 39 தாதிமை இல்­லங்­கள் ஆகி­ய­வற்­றி­டம் கருத்து சேக­ரிக்­கப்­பட்­டது.

வெளி­நா­டு­களில் வசிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­களும் உள்­ளூர் மக்­களும் தங்­கள் கருத்­து­களை முன்­வைத்­த­தா­கத் தேர்­தல் துறை கூறி­யது.

வெளி­நா­டு­களில் வசிக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­ட­ம் இணை­யம் மூலம் நடத்­தப்­பட்ட ஆய்­வின்­மூ­லம் 3,221 கருத்­து­கள் கிடைத்­தாக அது தெரி­வித்­தது. ஆய்­வில் பங்­கெ­டுத்­த­வர்­களில் 82 விழுக்­காட்­டி­னர் அஞ்­சல் வாக்­க­ளிப்பு தொடர்­பான புதிய அணு­கு

­மு­றையை வர­வேற்­றதாக தேர்­தல் துறை தெரிவித்தது.

2023 செப்­டம்­பருக்குள் நடத்­தப்­பட வேண்­டிய அதி­பர் தேர்

­த­லுக்கு இப்புதிய மு­றையை அறி முகம் செய்ய இருப்­ப­தாக தேர்­தல் துறை கடந்த மே மாதம் கூறியது.

வெளி­நா­டு­களில் வசித்­தா­லும் வாக்­க­ளிக்­கும் உரி­மையை இழக்­கா­மல் அதே­நே­ரம் எளி­தாக வாக்­ க­ளிக்கவும் புதிய வசதி வழி­

வ­குப்­ப­தாக அவர்­கள் கூறி­னர்.

இருப்­பி­னும், தங்­கள் வாக்­குச் சீட்­டு­க­ளின் பாது­காப்பு குறித்து அவர்­கள் அக்­கறை தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வாக்­குச்சீட்­டு­கள் காணா­மல் போகக்­கூ­டும் என்­ப­தும் தேர்­தல் துறை­யை அவை தாம­த­மாகச் சென்றடை­யக்­கூ­டும் என்­ப­தும் அவர்­க­ளின் அக்கறைக்குரிய கருத்­துகளாக இருந்தன.

சிங்கப்பூர் தேர்தல் துறை: வெளிநாடுகளில் வாக்களித்து அனுப்பும் சீட்டுகளுக்கு ஒப்புகை