குரங்கம்மையைக் கண்டறியும் சோதனைக் கருவி

குரங்கம்மையைக் கண்டறியும் சோதனைக் கருவி

1 mins read
dd8bb747-847c-46c5-9a1f-cd5c847e8d78
புதுடெல்லியிலும் கேரள மாநிலத்திலும் நால்வருக்குக் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து வெளி நாடுகளில் இருந்து வருவோரிடம் டெல்லி, கேரள அனைத்துலக விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்யப்படுகிறது. படம்: இந்திய ஊடகம் பல மாநிலங்களில் விழிப்புநிலை - பக்கம் 5 -

குரங்­கம்மைத் தொற்று உள்­ளதா என்­பதை 50 நிமி­டங்­களில் கண்­ட­றி­யக் கூடிய பிசி­ஆர் பரி­சோ­த­னைக் கரு­வியை உரு­வாக்கி இருப்­ப­தாக இந்­திய நிறு­வ­னம் ஒன்று அறி­வித்து உள்­ளது.

ஆர்டி-பிசி­ஆர் கரு­வி­கள் மூல­மா­க­வும் பிஓசி என்­னும் வடி­வத்­தி­லும் குரங்­கம்­மைத் தொற்­றுக்­கான பரி­சோ­தனை செய்­த­தாக 'ஜீன்ஸ்2மி' என்­னும் அந்த நிறு

­வ­னம் தெரி­வித்து உள்­ளது. பிஓசி பரி­சோ­தனை முறையை மருத்­து­வ­மனை, விமான நிலை­யம், பரி­சோ­த­னைக்­கூ­டம், சுகா­தார முகாம்­கள் போன்­ற­வற்­றில் பயன்­

ப­டுத்­தப்­ப­ட­லாம்.

இது தொடர்­பாக அந்த நிறு

­வ­னம் ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது.

"ஒற்றைச் சோத­னைக் குழாய் முறை­யில் தொற்று தொடர்­பான பல்­வேறு பரி­சோ­த­னை­க­ளைச் செய்ய முடி­யும். மேலும், சின்­னம்­மையை உரு­வாக்­கும் கிரு­மி­களில் இருந்து குரங்­கம்மை கிரு­மி­களை வேறு­ப­டுத்தி அறி­யும் திறனை ஆர்டி-பிசி­ஆர் கரு­வி­கள் கொண்­டுள்­ளன," என்று அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

குரங்­கம்­மைக்கு ஆர்டி-பிசி­ஆர் கருவி கண்­டு­பி­டித்து உள்ள முதல் இந்­திய நிறு­வ­னம் இது. இருப்­பி­னும், தற்­போ­தைக்கு இக்­க­ரு­வியை ஆராய்ச்­சிக்கு மட்­டுமே பயன்­ப­டுத்த முடி­யும்.

ஐசி­எம்­ஆர் எனப்­படும் இந்­திய மருத்­துவ ஆராய்ச்­சிக் கழ­கத்­தின் மதிப்­பீட்­டுக்­கா­கக் காத்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பி­டும் 'ஜீன்ஸ்2மி' நிறு­

வ­னம், கழ­கத்­தின் அனு­மதி கிடைத்­த­தும் சந்­தை­யில் இக்­

க­ரு­வியை அறி­மு­கம் செய்ய இருப்­ப­தா­கக் கூறி­யது.