வெளிநாட்டினருக்கு ஜிஎஸ்டியை திருப்பித் தர இந்தியா யோசனை

வெளிநாட்டினருக்கு ஜிஎஸ்டியை திருப்பித் தர இந்தியா யோசனை

2 mins read

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இந்­தியா செல்­வோர் அங்கு செலுத்­திய பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) அவர்­க­ளி­டம் திருப்­பித் தரும் திட்­டத்தை இந்­தியா சோதித்­துப் பார்க்க உள்­ளது.

வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­யணி ஒரு­வர், இந்­தி­யா­வில் வாங்­கிய ஒரு பொருளை அந்­நாட்­டை­விட்டு வெளியே எடுத்­துச் செல்­லும்­பட்­சத்­தில், அதற்­கான ஜிஎஸ்டி­யைத் திரும்­பப் பெற இய­லும். அதற்கு அந்­தச் சுற்­றுப்­ப­யணி அதி­க­பட்­சம் ஆறு மாதங்­க­ளுக்­கு­மேல் இந்­தி­யா­வில் இருந்­தி­ருக்­கக்­கூ­டாது.

வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­

க­ளுக்கு ஜிஎஸ்டி அல்­லது மதிப்­புக் கூட்டு வரி­யைத் திருப்­பித் தரு­வது பல நாடு­க­ளி­லும் நடை­மு­றை­யில் இருக்­கிறது.

குறிப்­பிட்ட விலைக்­கு­மேல் உள்ள பொருள்­க­ளுக்­கான ஜிஎஸ்­டி­யைத் திரும்­பக் கோர­லாம். விமான நிலை­யத்­தில் உரிய சான்று­ க­ளைக் காட்டி அத்­தொ­கையை ரொக்­க­மா­கப் பெற­லாம் அல்­லது பய­ணி­யின் வங்­கிக்­க­ணக்­கில் அத்­தொகை வரவு வைக்­கப்­ப­ட­லாம்.

இருப்­பி­னும், இந்­தி­யா­வில் இந்த ஏற்­பாட்­டைச் செய்ய பல நடை­

மு­றைச் சிக்­கல்­கள் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"இதற்­கு ஜிஎஸ்டி கட்­ட­மைப்­பில் பல மாற்­றங்­கள் செய்­யப்­பட வேண்­டும். இதற்கு நீண்­ட­கா­லம் ஆக­லாம். அதே­நே­ரம் தவ­றா­கப் பயன்­ப­டுத்த முடி­யாத வகை­யில் ஜிஎஸ்டி திருப்­பிக் கொடுக்­கும் நடை­முறை இருக்க வேண்­டி­யது அவ­சி­யம்," என்று வரி வல்­லு­நர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

'பிரைஸ் வாட்­டர்­ஹ­வுஸ் அண்ட் கோ' ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் பங்­கா­ளி­யான திரு பிரத்­திக் ஜெ யின் கூறு­கை­யில், "இந்­தி­யா­வில் வாங்­கி­னா­லும் இங்­கு பயன்­ப­டுத்­தாத பொரு­ளுக்­குத்­தான் ஜிஎஸ்டி திருப்­பித் தரப்­படும்.

"இவ்வாறு செய்வது கை

வி­னைப்­பொ­ருள்­கள், துணி­ம­ணி­கள் போன்­ற­வற்­றின் விற்­ப­னைக்­கும் சுற்­று­லாத் துறைக்­கும் ஊக்­க­ ம­ளிக்­கும். இதற்­கான உரிய விதி­

க­ளை­யும் செயல்­மு­றை­யை­யும் அர­சாங்­கம் வகுக்க வேண்­டும்," என்­றார் அவர்.