நாடு திரும்புகிறார் கோத்தபாய

நாடு திரும்புகிறார் கோத்தபாய

1 mins read

பதவி இழந்த முன்­னாள் இலங்கை அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே விரை­வில் இலங்கை திரும்­பு­வார் என்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்­கள் ஒன்­று­தி­ரண்டு பெரும் புரட்சி செய்­த­தன் கார­ண­மாக இலங்­கை­யி­லி­ருந்து தப்­பிய கோத்­த­பாய சிங்­கப்­பூ­ரில் தங்கி உள்­ளார்.

அவ­ருக்கு 14 நாள் சுற்­றுப்­ப­யண விசா வழங்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு அதி­கா­ரி­களை மேற்­கோள் காட்டி 'டெய்லி மிரர்' கூறி­உள்­ளது.

அச்­செய்­தி­யின்­படி, ஜூலை 14ஆம் தேதி சிங்­கப்­பூர் வந்த கோத்­த­பா­ய­வின் விசா இன்­று­டன் (ஜூலை 27) முடி­வ­டைய வேண்­டும். இந்­நி­லை­யில், கோத்­த­பாய விரை­வில் நாடு திரும்­பு­வார் என்று இலங்கை அமைச்­ச­ர­வை­யின் பேச்­சா­ளர் பண்­டுல குண­வர்த்­தன நேற்­றுக் காலை கூறி­னார்.

"கோத்­த­பாய நாட்­டை­விட்டு ஓடி­ய­தா­கவோ ஒளிந்­தி­ருப்­ப­தா­கவோ நான் நம்­ப­வில்லை. உண்­மை­யில் முறை­யான அதி­கா­ரத்­துவ விதி­

க­ளைப் பின்­பற்றி அவர் வெளி­நாடு சென்­றி­ருக்­கி­றார்," என்­றும் டாக்­டர் குண­வர்த்­தன தெரி­வித்­தார்.

அவர் இவ்­வாறு கூறி­னா­லும், கோத்­த­பாய தமது சொந்த நாட்­டுக்­குப் பய­ண­மா­வது தொடர்­பாக சிங்­கப்­பூ­ரில் அதி­கா­ரத்­துவ தக­வல் எது­வும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

சிங்கப்பூரில் கோத்தபாய எங்கே தங்கி இருக்கிறார் என்ற விவரம்கூட எந்தவோர் ஊடகத்திலும் வெளி யாகவில்லை.