பிரானி தீவில் விபத்துக்குள்ளான சிங்கப்பூர் ஊழியர் ஒருவர் மாண்டார்.
55 வயதான அந்த ஆடவர் சென்ற வாரம் புதன்கிழமையன்று (20 ஜூலை) மரணமடைந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இவ்வாண்டு வேலையிடங்களில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 31க்கு அதிகரித்தது.
பிரானி தீவில் இருக்கும் கடற்கரைக் காவல் படையின் தலைமையகத்தில் படகிலிருந்து ஆடவர் விழுந்தார்.
அதற்குப் பிறகு படகின் விசைக் கருவி அவரை மோதியது.
சென்ற ஆண்டு முழுவதும் சிங்கப்பூரில் 37 வேலையிட மரணங்கள் பதிவாயின.
இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் பதிவான எண்ணிக்கை அதைவிட சற்றே குறைவு.
2020ஆம் ஆண்டு முழுவதும் 30 வேலையிட மரணங்கள் பதிவாயின.
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசாவில் நடைபெற்ற வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார விருது நிகழ்ச்சியில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அமைப்பின் தலைவர் ஜான் இங் இந்த விவரத்தைத் தெரிவித்தார்.
ஜூலை 20ஆம் தேதியன்று காலை 11 மணியளவில் பிரானி வே பகுதியில் சம்பவம் நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு கூறியது.
தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.
மாண்ட ஊழியர் அலோசனை சேவைகளையும் பயிற்சிகளையும் வழங்கும் சிட்டாடெல் நிறுவனத்திற்கு வேலை செய்தவர்.
அவர் ஒரு பயிற்றுவிப்பாளர் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
தனது பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவைக்குமாறு மனிதவள அமைச்சு சிட்டாடெல்லுக்கு உத்தரவிட்டது.

