மலேசியாவில் மின்தடை; மூன்று மணி நேரத்தில் முழுமையாக சரிசெய்யப்பட்டது

மலே­சி­யா­வின் பல பகு­தி­களில் நேற்று பிற்­ப­கல் மின்­தடை ஏற்­பட்­டது. மின்­தடை ஏற்­பட்ட மூன்று மணி நேரத்­தில் அது சரி­செய்­யப்­பட்­டது. மின்­த­டை­யால் பாதிக்­கப்­பட்ட அனைத்துப் பகு­தி­க­ளி­லும் பிற்­பகல் 3.02 மணிக்­குள் மின்­சார விநி­யோகம் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­ய­தாக தேசிய பய­னீட்டு நிறு­வ­ன­மான தெனாகா நேஷ­னல் பெர்ஹாட் தெரி­வித்­தது.

"மின்­தடை ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து, பெரும்­பா­லான பகுதி­களி­லும் மின்­சார விநி­யோ­கம் 20 நிமி­டங்­களில் கட்­டங்­கட்­ட­மாக மீட்­டெ­டுக்­கப்­பட்­டது.

பிற்­ப­கல் 12.39 மணிக்கு மின்­தடை தொடங்­கி­யது. ஜோகூ­ரில் உள்ள மின் உற்­பத்தி நிலை­யம் ஒன்­றில் ஏற்­பட்ட தீயே இதற்­கான கார­ணம் என்று தெனாகா நேஷனல் நிறு­வ­னம் கூறி­யது. இத­னால் மலே­சிய தீப­கற்­பத்­தில் மொத்த மின் விநி­யோகத் தேவை­யில் 10 விழுக்­காடு அளவு பாதிப்பு ஏற்­பட்­டது.

பினாங்கு, பாகாங், நெகிரி செம்­பி­லான், கிள்­ளான் பள்­ளத்­தாக்கு உள்­ளிட்ட பல்­வேறு பகு­தி­களில் மின்­தடை ஏற்­பட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பிட்­டன.

சிலாங்­கூர் மாநி­லத்­தில் மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­பூர், அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களை கிள்­ளான் பள்­ளத்­தாக்கு உள்­ள­டக்கு­கிறது. பங்­சார், செராஸ், ஷா ஆலம் உள்­ளிட்ட இடங்­களில் மின்­தடை ஏற்­பட்­டது.

மின்­தடை ஏற்­பட்­டது குறித்து மலே­சி­யர்­கள் பல­ரும் டுவிட்­ட­ரில் தங்­கள் அதி­ருப்­தியை வெளிப்­படுத்­தி­னர்.

பினாங்கு, பாகாங் மாநி­லங்­களில் உள்ள சில பகு­தி­க­ளி­லும் மின்­தடை ஏற்­பட்­டது. ஆனால், ஒரு மணி நேரத்­திற்­குள் மின் விநி­யோகம் அங்கு வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­யது.

மின்­தடை கார­ண­மாக கோலா­லம்­பூ­ரில் போக்­கு­வ­ரத்து விளக்­கு­கள் பல­வும் செய­லி­ழந்­தன. கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­தின் பிர­தான முனை­ய­மும் பாதிக்­கப்­பட்­டது. மின்­தடை ஏற்­பட்டு ஒரு மணி நேரத்­தில் அது சரி­செய்­யப்­பட்­ட­தாக விமான நிலை­யம் டுவிட்­ட­ரில் தெரி­வித்­தது.

பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­ன­மான ரேப்­பிட்­கே­எல், மின்­த­டை­யால் தன் சேவை பாதிக்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!