கோத்தபாயவுக்கு சிங்கப்பூரில் வருகை அனுமதி நீட்டிப்பு

கோத்தபாயவுக்கு சிங்கப்பூரில் வருகை அனுமதி நீட்டிப்பு

2 mins read

இலங்­கை­யின் முன்­னாள் அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே, சிங்­கப்­பூரில் இன்­னும் சிறிது காலம் தங்­கு­வார் எனத் தெரி­கிறது.

இரு வாரங்­க­ளுக்கு முன்பு அவர் சிங்­கப்­பூ­ருக்கு தனி­யார் பய­ணம் மேற்­கொண்­ட­போது அவ­ருக்கு அளிக்­கப்­பட்டு இருந்த குறு­கி­ய­கால வருகை அனு­மதி, மேலும் 14 நாள்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­யப்­ப­டு­கிறது.

கோத்­த­பாய இலங்கை திரும்­பு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக இலங்கை அமைச்­ச­ர­வை­யின் பேச்­சா­ளர் பண்­டுல குண­வர்த்­தன நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­களி­டம் கூறி­யி­ருந்­த­தைத் தொடர்ந்து, இந்­தத் தக­வல் வெளி­யாகி இருக்­கிறது.

கோத்­த­பாய எப்­போது இலங்கை­ திரும்­பு­வார் என்­பது பற்றி தமக்குத் தெரி­யாது என்­றா­லும், அவர் ஒளிந்­தி­ருக்­கவோ நாடு கடத்­தப்­படவோ இல்லை என்­பதை குணவர்த்­தன வலி­யுறுத்­தி­னார்.

கோத்­த­பாய கூடிய விரை­வில் நாடு திரும்ப விரும்­பு­வ­தா­க­வும் இலங்­கைத் தலை­ந­கர் கொழும்­பிற்கு அருகே இருக்­கும் புற­ந­கர்ப் பகு­தி­யில் உள்ள தம் இல்­லத்­தில் அவர் வசிக்க விரும்­பு­வ­தா­க­வும் பெயர் குறிப்­பிட விரும்­பாத இலங்கை அர­சாங்க அதி­காரி ஒரு­வர் குறிப்­பிட்­ட­தாக புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னம் தக­வல் வெளி­யிட்­டது.

ஜூலை 14ஆம் தேதி, மாலத்­தீ­வில் இருந்து புறப்­பட்ட கோத்­த­பாய, 73, சவூ­தியா விமா­னத்­தில் பய­ணம் செய்து சிங்­கப்­பூ­ரில் தரை­யி­றங்­கி­னார். இங்கு வந்த அவ­ருக்கு 14 நாள் வருகை அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­வு­டன் தம் பதவி வில­கல் கடி­தத்தை கோத்­த­பாய சமர்ப்­பித்­தார்.

அடுத்த நாள், இலங்கை நாடா­ளு­மன்­றம் கோத்­த­பா­ய­வின் பதவி வில­கலை அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தது.

கோத்­த­பா­ய­வின் நண்­ப­ரும் முன்­னாள் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்க, இலங்­கை­யின் புதிய அதி­ப­ராக கடந்த வாரம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் தேர்வு செய்­யப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், கோத்­த­பா­ய­வுக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்ள வருகை அனு­மதி ஆகஸ்ட் 11ஆம் தேதி காலா­வ­தி­யா­கும் என அறி­யப்­படு­கிறது.

அவர் தொடக்­கத்­தில் நக­ரின் மையப் பகு­தி­யில் உள்ள ஹோட்­டல் ஒன்­றில் தங்கி இருந்­தார். பிறகு தனி­யார் இல்­லம் ஒன்­றுக்கு அவர் மாறி­விட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­தில் இருந்து இது­வரை கோத்­த­பாய பொது­வெ­ளி­யில் காணப்­ப­ட­வில்லை.