சிங்கப்பூரில் வேலைச் சந்தையின் மீட்சி இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் தொடர்ந்தது. ஆனால் பணவீக்கம், உக்ரேன்-ரஷ்யா போர், பெரும்
பொருளியல் கொண்டுள்ள நாடுகளில் மீண்டும் தலைதூக்கும் கொவிட்-19 பாதிப்பு போன்ற உலகளாவிய சவால்கள் இருப்பதால் ஊழியர்களுக்கான தேவை பாதிப்படையக்கூடும் என்று
அஞ்சப்படுகிறது.
கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பு இருந்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏறத்தாழ நான்கு விழுக்காடு அதிகரித்துள்ளது. வேலையின்மை நிலவரம் மேம்பட்டு வருவதால் இந்த அதிகரிப்பு மெது
வடையும் என்று மனிதவள அமைச்சு முன்னுரைத்துள்ளது.
"வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மிக விரைவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு இருந்த நிலையை அது நெருங்குகிறது," என்று அமைச்சு நேற்று கூறியது.
2019ஆம் ஆண்டைக் காட்டிலும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 10 விழுக்காடு குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் காலாண்டில் வெளிநாட்டு ஊழியர்களைச் சேர்க்காமல் மொத்த வேலை நியமனம் 1.9 விழுக்காடு (64,000) அதி
கரித்தது. முதல் காலாண்டில் வேலை நியமன அதிகரிப்புக்கு சேவைத் துறை அதிகம்
பங்களித்தது. அத்துறையில் 27,300 பேர் வேலையில் அமர்த்தப்பட்டனர்.
அதற்கு அடுத்ததாக கட்டுமானத் துறையில் 25,200 பேரும் உற்பத்தித் துறையில் 12,200 பேரும் வேலையில் அமர்த்தப்பட்டனர். இதற்கிடையே, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு முன் இல்லாத அளவில் கிட்டத்தட்ட 1,000க்குக் குறைந்தது.
முதல் காலாண்டில் 1,320 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
சேவைத் துறையில் ஆக அதிகமாக கிட்டத்தட்ட 700 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
அடுத்த சில மாதங்களில் வேலை நியமனங்கள் தொடர்ந்து வலுவான நிலையில் இருக்கும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால் ஊழியர்களின்
சம்பளத்தை உயர்த்த எண்ணம் கொண்டுள்ள நிறுவனங்
களின் எண்ணிக்கை குறைந்
திருப்பதாக அது கூறியது.
2019ஆம் ஆண்டுடன் ஒப்
பிடுகையில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் 99 விழுக்காடாகப் பதிவாகியிருப்பதை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சுட்டினார். சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீண்டு வந்திருப்பதை இது தெள்ளத் தெளிவாகக் காட்டுவதாக அவர் கூறினார்.
"சிறிய, நடுத்தர நிறுவனங்களில் ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அவை கூடுதல் ஊழியர்களை வேலையில் அமர்த்த இருக்கின்றன. ஆனால் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் செய்ய விரும்பாத வேலைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை ஏற்றம் காணும்," என்று டாக்டர் டான் தெரிவித்தார்.
கட்டுமானம், உற்பத்தி போன்ற துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை விரை வாக உயரும் என்றார் அவர்.

