இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாளை மறுநாள் அந்நாட்டின் உச்ச
நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்
பட்டுள்ளது.
இலங்கையின் பொருளியல் நெருக்கடிநிலைக்கு கோத்தபாய உட்பட அந்நாட்டு அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும்
காரணம் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணைக்காக கோத்தபாய நீதி
மன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என கடந்த புதன்கிழமையன்று அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை நீதிமன்ற அதிகாரி சேனல் நியூஸ் ஏஷியாவிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்திற்கு கோத்தபாய நேரடியாகச் செல்வதற்கான கட்டாயம் இருக்காது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். கோத்தபாயவின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள்
நீதிமன்றத்துக்குச் சென்று
அவரைப் பிரதிநிதிக்கலாம் என்று
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி
யாளர்களிடம் பேசிய மூத்த
வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் கடுமையான பொருளியல் நெருக்கடிநிலை ஏற்பட்டு உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் அந்நாட்டு மக்கள் சிரமப்படுகின்றனர்.
இலங்கை மக்களின் மனதை வாட்டி வதைக்கும் துன்பம் பெருஞ்சீற்றமாக வெடித்ததை அடுத்து, நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதிபர் பதவியிலிருந்து கோத்தபாய விலக வேண்டும் என்று போர்க் கொடி உயர்த்திய ஆர்ப்பாட்டக்
காரர்களின் கொந்தளிப்பு
இம்மாதம் உச்சத்தை எட்டியது.
சினங்கொண்டு அதிபர் மாளிகைக்குப் படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை ஓரங்கட்டி அதற்குள் நுழைந்தனர்.
அதற்கு முன்பே இலங்கை ராணுவத்தின் உதவியுடன் கோத்தபாயவும் அவரது குடும்பத்தாரும் அங்கிருந்து தப்பினர்.
இலங்கையிலிருந்து மாலத்
தீவுக்குத் தப்பிய கோத்தபாய,
அங்கிருந்து சவூதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைந்தார். அவருக்கு குறுகிய கால குடிநுழைவு அனுமதியை சிங்கப்பூர் வழங்கியது.
தற்போது சிங்கப்பூரில் இருக்கும் கோத்தபாயவின் விசா 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை சிங்கப்பூரில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. கோத்தபாய கூடிய விரைவில் இலங்கைக்குத் திரும்பக்கூடும் என்று இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

