தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர் பட்டியலில் எஸ். தனபாலன்

2 mins read
c356d553-9977-4e60-addd-1784838bf9a6
சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர் பட்டியலில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் எஸ். தனபாலனுக்கு விருது வழங்குகிறார் சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர் பட்டியல் அமைப்பின் தலைவர் திரு எஸ்.ஏ. நாதன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் அருகில் உள்ளார். படம்: சிங்கப்பூரின் புகழ்பெற்ற இந்தியர் பட்டியல் அமைப்பு -

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

முன்­னாள் அமைச்­சர் எஸ். தனபாலன் உட்­பட 15 பேர் சிங்­கப்­பூ­ரின் புகழ்­பெற்ற இந்­தி­யர் பட்­டி­ய­லில் இடம்­பெற்று சிறப்­பிக்­கப்­பட்­ட­னர். சுதந்­தி­ரத்­திற்­குப் பின்­னர் சிங்­கப்­பூர் அர­சி­ய­லில் தலை­சிறந்து பங்­காற்­றி­ய­தற்­கான எஸ். ராஜரத்னம் விருது திரு தன­பா­ல­னுக்கு வழங்­கப்­பட்­டது.

அண்­மை­யில் மறைந்த நட­னக் கலை முன்­னோடி சாந்தா பாஸ்கர், தூதர் கே. கேச­வ­பாணி, அமீரலி ஜுமா­பாய், கருப்­பையா வெள்­ளை­சாமி, பேரா­சி­ரி­யர் நம்­பி­யார், சூர் சிங், ஜவான்ட் சிங், பி கோவிந்­த­சாமி செட்­டி­யார், ஜார்ஜ் சுப்­பையா, மைமூன் பி, குளோரி பார்­ன­பாஸ், பிசி சுப்­பையா ஆகி­யோர் கௌர­விக்­கப்­பட்­ட­னர்.

நேற்று சிங்­கப்­பூர் பொழு­து­போக்கு மன்­றத்­தில் ஏறத்­தாழ 150 பேர் கலந்­து­கொண்ட நிகழ்­வில் அவர்­க­ளுக்கு இந்த விருது வழங்­கப்­பட்­டது. செம்­ப­வாங் குழுத்­தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்­ரம் நாயர் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு விரு­தாளர்­க­ளுக்­குக் கேட­யங்­களை வழங்­கி­னார்.

அர­சி­யல், கலை, மருத்­து­வம், தொண்­டூ­ழி­யம், நிதி­யா­த­ரவு, விளை­யாட்டு போன்ற வெவ்­வேறு துறை­களில் பங்­காற்­றி­ய­வர்­கள் இந்­தப் பட்­டி­ய­லுக்­குத் தேர்ந்­து எடுக்­கப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரின் புகழ்­பெற்ற இந்தியர் பட்­டி­யல் நிகழ்ச்சி நடை­பெற்றது இது இரண்­டாம் முறை. இதற்கு முன்­னர் 2020ஆம் ஆண்­டில் முதன்­மு­றை­யாக நடத்­தப்­பட்­ட­போது முன்­னாள் அதி­பர் எஸ் ஆர் நாதன் விரு­தா­ளர் பட்­டி­ய­லுக்­குத் தலைமை தாங்­கி­னார்.

புகழ்­பெற்­ற­வர்­கள் பட்­டி­ய­லில் இடம்­பெற்­ற­தில் மிகுந்த பெரு­மை கொள்­வ­தா­கத் தெரி­வித்­தார் திரு தன­பா­லன்.

சிங்­கப்­பூ­ரின் முன்­னோ­டித் தலை­முறை அர­சி­யல் தலை­வர்­களில் இந்­திய சமூ­கத்­தைச் சேர்ந்த ஒரே ஒரு­வ­ரான திரு எஸ்.ராஜ­ரத்னத்தின் பெய­ரில் விருது வழங்­கப்­பட்­டது மேலும் சிறப்பு சேர்த்­த­தா­கத் தெரி­வித்­தார் அவர்.

திரு ராஜ­ரத்­னத்­து­டன் சேர்ந்து பணி­யாற்­றிய நினை­வு­களை விருது பெற்­ற­தன்­பின் செய்­தி­யா­ளர்­களுக்கு அளித்த நேர்­கா­ண­லில் திரு தனபாலன் பகிர்ந்துகொண்டார்.

"நம் நாட்­டின் வெளி­யு­ற­வுக் கொள்­கை­களை அடிப்­ப­டை­யி­ல் இ­ருந்து உரு­வாக்­கிய மாமனிதர் திரு ராஜ­ரத்­னம். பின்­னர் வெளி­யு­றவு அமைச்­சர் பொறுப்பை நான் ஏற்­றேன். எவ்­வ­ளவு முக்­கிய பங்கை அவர் ஆற்­றி­யுள்­ளார் என்பதை அறிந்­தேன். இன்று இந்த கௌர­வம் எனக்கு வழங்­கப்­பட்­டது மகிழ்ச்சி தரு­கிறது," என்­றார் அவர்.

சரி­யான தரு­ணத்­தில் சரி­யான இடத்­தில் இருந்­த­தால்­தான் அர­சி­ய­லில் அவ­ரது ஈடு­பா­டும் பங்­கும் சிறப்­பாக அமைந்­தது என்று தெரி­வித்­தார் அவர்.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், தெமா­செக் ஹோல்­டிங்ஸ், டிபி­எஸ் வங்கி போன்­ற­வற்­றுக்­குத் தலை­வ­ரா­க­வும் சேவை­யாற்­றிய திரு தன­பா­லன், அதி­பர் ஆலோ­சனை மன்­றத்­தின் ஆக நீண்டகால உறுப்­பி­ன­ரா­கச் சேவை­யாற்­றி­ய­பின் அண்­மை­யில் பதவி வில­கி­னார்.

சிங்­கப்­பூ­ரின் புகழ்­பெற்ற இந்­தி­யர் பட்­டி­ய­லுக்­குத் தகு­தி­யா­னோ­ரைத் தேர்ந்­தெ­டுக்­கும் பொறுப்பு ஏற்­பாட்­டுக் குழு­வின் ஆலோ­ச­கர் மன்­றத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

டாக்­டர் வி.பி.நாயர் தலை­மை­யி­லான குழு­வில் திரு வி‌ஸ்வா சதா­சி­வன், எஸ்.வடி­வ­ழ­கன் முத­லி­யோர் இடம்பெற்றிருந்தனர்.

நிர்­வா­கக் குழு­விற்­குத் தலைமை தாங்கினார் இந்­தி­யன் மூவி நியூஸ் சஞ்­சி­கையை நீண்­ட­கா­ல­மாக வழி­நடத்­திய திரு எஸ்.ஏ.நாதன்.