இன, சமயங்களுக்கு இடையிலான குழுக்களுக்குப் புதிய பெயர்

இன, சமயங்களுக்கு இடையிலான குழுக்களுக்குப் புதிய பெயர்

2 mins read

வெவ்­வேறு இனங்­கள், சம­யங்­க­ளைச் சேர்ந்த மக்­க­ளுக்கு இடையே நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தும் குழுத்­தொ­கு­திக் குழுக்­கள் புதி­ய­தொரு பெய­ரைப் பெற­வி­ருக்­கின்­றன. அத­னு­டன், தாங்­கள் மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் அவை அதி­க­ரிக்­க­வுள்­ளன.

2002ல் முதன்­மு­றை­யாக அமைக்­கப்­பட்ட பல இன, சமய நன்னம்­பிக்கை வட்­டம் (ஐஆர்­சிசி) இன, சமய நல்­லி­ணக்க வட்­ட­மாகப் பெயர் மாற்­றம் காணும். அமைதிக் காலத்­தி­லும் நெருக்­க­டி­யான சூழ­லி­லும் பல்­வேறு சமூ­கங்­களுக்கு இடையே நம்­பிக்கை, புரிந்­து­ணர்வு, தன்­னம்­பிக்­கையை மேம்­படுத்­தும் பணியை இக்­கு­ழுக்­கள் தீவிரப்­படுத்­தும்.

மாறி­வ­ரும் சமு­தாய மனப்­போக்கு, சமூக ஊட­கங்­க­ளால் ஏற்­படும் தாக்கம் போன்ற சவால்­களை ஐஆர்­சிசி சமாளிப்­பதை உறு­தி­செய்ய பணிக்­குழு ஒன்று முன்­னெ­டுத்­துள்ள திட்­டங்­களின் ஒரு பகு­தி­யாக இந்த மாற்­றங்­கள் இடம்­பெறு­கின்­றன.

கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு கடந்த மார்ச் மாதம் இந்­தப் பணிக்­கு­ழுவை அமைத்­தது. ஐஆர்­சிசி தலை­வர்­கள், இளை­யர்­கள், மக­ளிர், சமூ­கப் பங்­கா­ளி­கள் உள்­ளிட்ட 28 உறுப்­பி­னர்­கள், ஜூலை­யில் முடி­வ­டைந்த ஆறு அமர்­வு­களில் சந்­தித்­த­னர்.

அடுத்த இரண்டு, மூன்று ஆண்­டு­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட உள்ள இந்த மாற்­றங்­களை நேற்று நடை­பெற்ற ஐஆர்­சிசி­யின் 20வது ஆண்டு நிறை­வுக் கொண்­டாட்ட நிகழ்ச்­சி­யில் கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் அறி­வித்­தார்.

பல்­வேறு சமூ­கங்­க­ளுக்கு இடையே கூடு­தல் கலந்­து­ற­வா­டலை ஊக்­கு­விக்க நல்­லி­ணக்க வட்­டம் வழக்­க­மான, ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட திட்­டங்­க­ளைக் கூடு­தலாக நடத்த பணிக்­குழு பரிந்­து­ரைக்­கிறது. சிங்­கப்­பூ­ரில் 91 ஐஆர்­சிசி குழுக்கள் உள்­ளன. இவற்­றில் 1,500க்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­கள் தொண்டு புரி­கின்­ற­னர். இக்­கு­ழுக்­கள் ஒவ்­வோர் ஆண்­டும் 250க்கும் அதி­க­மான நட­வடிக்­கை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­கின்­றன. ஜூலை மாதத்தை இன, சமய நல்­லி­ணக்க மாத­மாக அர்ப்­ப­ணிக்­க­வும் பணிக்­குழு பரிந்­து­ரைத்­தது. ஜூலை­யில் சாலைக்­காட்­சி­கள் போன்ற சமூகக் கொண்­டாட்­டங்­க­ளுக்கு நல்­லி­ணக்க வட்­டம் ஏற்­பாடு செய்­ய­லாம்.

நல்­லி­ணக்க வட்­டத்­தில் உறுப்­பி­ன­ராக பள்­ளி­கள், வர்த்­த­கக் குழுக்­கள் போன்ற உள்­ளூர் சமூ­கப் பங்­கா­ளி­களுக்கு அழைப்பு விடுக்­கப்­பட வேண்டும் என்று பணிக்­குழு கூறி­யது.

கட்­ட­மைக்­கப்­பட்ட கூடு­த­லான பயிற்சி அளிக்­கப்­ப­டு­வ­தன் மூலம் குழுக்கள் தங்­கள் ஆற்­றல்­களை வளர்த்துக்­கொள்­ளு­மா­றும் பணிக்­குழு பரிந்­து­ரைத்­தது.

ஐஆர்­சிசி குழுக்­களை அமைப்­ப­தற்­கான யோச­னையை 2002ல் அப்­போ­தைய பிர­த­மர் கோ சோக் டோங் முன்­வைத்­தி­ருந்­தார். 2001 செப்­டம்­பர் 11ஆம் தேதி அமெ­ரிக்­கா­வில் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் நடத்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து இந்த யோசனை எழுந்­தது.

ஓய்­வு­பெற்ற கௌரவ மூத்த அமைச்­ச­ரான திரு கோ நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார். அப்போது பேசிய அவர், இன, சமய பிரிவு­களின்­கீழ் சமு­தா­யம் உரு­வா­வதை தாங்­கள் விரும்­ப­வில்லை என்­பதை நாட்­டின் நிறுவனர்கள் முதல் நாளி­லேயே புரிந்­து­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார். என­வே­தான் இன, சமய வேற்று­மையை வலி­மை­யாக்க அடுத்­தடுத்த தலை­மு­றை­கள் கடு­மை­யாக உழைத்­த­தாக அவர் சொன்­னார்.