சாங்கி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை முதன்முறையாக கொவிட்-19க்கு முந்தைய நிலையில் இருந்ததில் பாதி கட்டத்தைத் தாண்டியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இந்தப் புள்ளி விவரம் பதிவானது.
இவ்வாண்டு இறுதிக்குள் அந்த இலக்கை எட்டத் திட்டமிடப்பட்டிருந்தது.
இப்போது எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே அது சாத்தியமாகியுள்ளது.
ஜூன் மாதம் சாங்கி விமான நிலையத்தில் மொத்தம் 18,400 விமானங்கள் வந்து சென்றன.
இந்த எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதிவானதில் 58.6 விழுக்காடு.
இவ்வாண்டு பிற்பாதியிலும் சாங்கி விமான நிலையம் தொடர்ந்து மீண்டுவரும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அது, சுற்றுப்பயணத் துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த பொருளியலுக்கும் பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

