அமெரிக்க நாடாளுமன்றக் குழு இன்று சிங்கப்பூர் வருகை; அதிபர், பிரதமர், அமைச்சர்களுடன் சந்திப்பு, பேச்சுவார்த்தை

அமெரிக்க நாடாளுமன்றக் குழு இன்று சிங்கப்பூர் வருகை; அதிபர், பிரதமர், அமைச்சர்களுடன் சந்திப்பு, பேச்சுவார்த்தை

3 mins read
68d3b5ba-1728-4062-994f-4a4f9e1b63d8
அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி. படம்: ஏஎஃப்பி -

அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் நேன்சி பெலோசி தலை­மை­யி­லான அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றக் குழு இருநாள் வருகை மேற்­கொண்டு இன்று சிங்­கப்­பூர் வரு­கிறது.

அதி­பர் ஹலிமா யாக்­கோப், பிர­த­மர் லீ சியன் லூங் ஆகி­யோ­ரை­யும் பல அமைச்­சர்­க­ளை­யும் அந்­தக் குழு சந்­திக்­கும் என்று சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

திரு­வாட்டி பெலோ­சி தலை­மை­யில் ஆறு பேரைக் கொண்ட நாடா­ளு­மன்­றக் குழு சிங்­கப்­பூர், மலே­சியா, தென்கொரியா, ஜப்­பான் ஆகிய நாடு­க­ளுக்­கான பய­ணங்­கள் உட்­பட ஆசியப் பசி­பிக் வட்­டா­ரத்­திற்குப் பய­ணம் மேற்­கொள்­வ­தாக அவரது அலு­வ­ல­கம் அறி­வித்­தது.

இந்த வட்­டா­ரத்­தில் உள்ள அமெ­ரிக்­கா­வின் அசைக்­க­மு­டி­யாத, வலு­வான நட்பு நாடு­கள், நண்­பர்­க­ளு­டன் கூடிய உறவு களைத் தன்­ வருகை மறு­உ­று­திப்­படுத்தும் என்று திரு­வாட்டி பெலோசி தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூர், மலே­சியா, தென்கொரியா, ஜப்­பான் நாடு­க­ளுக்­குச் செல்லும் எங்­கள் குழு, அங்கு உயர்­நிலைச் சந்­திப்­பு­களை நடத்­தும்.

"அமைதி, பாது­காப்பு, பொரு­ளி­யல் வளர்ச்சி, வர்த்­த­கம், கொவிட்-19 தொற்று, பரு­வ­நிலை நெருக்­கடி, மனித உரி­மை­கள், ஜன­நா­யக ஆளுமை ஆகி­யவை உள்­ளிட்ட பொது­வான நலன்­க­ளை­யும் நன்­னெ­றி­களை­யும் மேலும் எப்­படி மேம்­ப­டுத்­த­லாம் என்­பது பற்றி விவா­திக்­கப்­படும்," என்று திரு­வாட்டி பெலோசி அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தார்.

"அமெ­ரிக்க அதி­பர் பைட­னின் வலுவான தலை­மைத்­து­வத்­தின்­கீழ், இந்த வட்­டா­ரத்தில் விவே­க­மிக்க, உத்­தி­பூர்வ ஈடு­பாட்­டைக் கொண்­டி­ருக்க அமெ­ரிக்கா உறு­தி­யான கடப்­பாட்­டைக் கொண்­டுள்ளது.

"சுதந்­தி­ர­மான, செழிப்­பு­மிக்க இந்தோ-பசி­பிக் வட்­டா­ரம் அமெ­ரிக்­கா­வும் உல­க­மும் செழித்­தோங்க முக்­கி­ய­மா­னது," என்­றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அமெ­ரிக்­கா­வில் அதி­பர், துணை அதிபர் இரு­வ­ருக்­கும் அடுத்த நிலை­யில் இருப்­பவர் நாடா­ளு­மன்ற நாய­கர்.

அவர் தலை­மை­யில் நாடா­ளு­மன்­றக் குழு சிங்­கப்­பூ­ருக்கு வரு­கை­ய­ளிப்­பது இதுவே முதல்­முறை என்று தெரி­கிறது.

அமெ­ரிக்கத் துணை அதி­பர் கமலா ஹாரிஸ் 2021 ஆகஸ்ட்­டில் சிங்­கப்­பூ­ருக்கு வரு­கை­ய­ளித்­தார். 2022 மார்ச்­சில் பிர­தமர் லீ சியன் லூங் அமெ­ரிக்­கா­வுக்கு பய­ணம் மேற்­கொண்­டார். பிறகு 2022 மே மாதம் அமெ­ரிக்கா சென்ற திரு லீ, ஆசி­யான்-அமெ­ரிக்கா சிறப்பு உச்­ச­நிலை கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டார்.

அமெ­ரிக்க அதி­பர், துணை அதி­பர், நாடா­ளு­மன்ற நாய­கர் இதர நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை அப்­போது பிரதமர் லீ சந்­தித்­தார்.

தம்­மு­டைய குழு­வில் அமெ­ரிக்கா-ஆசிய பசி­பிக் வலு­வான பங்­கா­ளித்­துவ உற­வுக்கு ஆத­ர­வான பல­ரும் இடம்­பெற்று இருக்­கி­றார்­கள் என்று திரு­வாட்டி பெலோசி தெரி­வித்து இருக்­கி­றார். பயன்­த­ரக்­கூ­டிய சந்­திப்­பு­களை நடத்த தாங்­கள் விரும்­பு­வதாக அவர் குறிப்பிட்டு இருக்­கி­றார்.

அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் தனது அறிக்­கை­யில் தைவான் பற்றி எதை­யும் குறிப்­பி­ட­வில்லை. இருந்தாலும் அவர் தைவா­னுக்கு பய­ணம் மேற்­கொள்­ளக்­கூடும் என்று ஊகச் செய்­தி­கள் தலை­தூக்கி இருக்­கின்­றன. இந்­தச் செய்தி அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் சூட்­டைக் கிளப்பி­விட்டு இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ருக்கு வரும் அமெ­ரிக்க நாடாளு­மன்­றக் குழு­வில் இடம்பெற்று இருப்போரில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராஜா கிருஷ்­ண­மூர்த்தியும் ஒரு­வர்.

அவர், வேவுத்­துறை தொடர்­பான நாடாளு­மன்ற நிரந்­தரத் தேர்­வுக் குழு­வின் உறுப்­பி­னர். அதோடு, மேற்­பார்வை, சீர்­திருத்­தம் பற்­றிய நாடா­ளு­மன்­றக் குழு­வின் பொரு­ளி­யல் பய­னீட்­டா­ளர் கொள்கை தொடர்­பான துணைக் குழு­வுக்குத் தலை­வரா­க­வும் திரு ராஜா இருக்­கி­றார்.