காரில் எண்ண முடியாத அளவுக்குப் பணம்; 'புடவை வாங்கப்போன' எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

காரில் எண்ண முடியாத அளவுக்குப் பணம்; 'புடவை வாங்கப்போன' எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

2 mins read
d3274c66-02a9-4a6e-bc11-5ec0d292e8b6
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் ரூ.50 லட்சம் பணத்துடன் இந்தக் காரில் புடவை வாங்கச் சென்றனர். மேற்கு வங்காளத்தில் ஹவ்ரா அருகே நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அவர்களைக் காவல்துறை கைது செய்தது. படம்: இந்திய ஊடகம் -

காங்­கி­ரஸ் கூட்­டணி ஆட்சி நடக்கும் ஜார்­க்கண்ட் மாநி­லத்­தைச் சேர்ந்த காங்­கி­ரஸ் கட்சி எம்எல்ஏக் கள் மூன்று பேர், கட்டுக்கட்டாகப் பணத்­து­டன் மேற்கு வங்காள காவல்­து­றை­யி­டம் சிக்கியுள்ளனர்.

இர்­ஃபான் அன்­சாரி, ராஜேஷ் கச்­ச­ப், நமன் பிக்­சல் கொங்­கரி ஆகிய அந்த மூன்று எம்­எல்­ஏக்­களை­யும் அவர்­க­ளு­டன் காரில் சென்ற இதர இருவரையும் கைது செய்து காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.

காரில் இருந்த பணத்தைத் தங்­களால் எண்ண முடி­யா­த­தால் இயந்­தி­ரம் கொண்டு வந்து அவற்றை எண்ணிப் பார்த்­த­தா­க­வும் மொத்­தம் ஏறக்­கு­றைய ரூ.50 லட்­சம் இருந்­த­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

இது பற்றிக் கருத்து கூறிய அந்த எம்­எல்­ஏக்­கள், பழங்­குடி மக்­கள் கொண்­டா­டும் ஒரு விழா­வில், அந்த மக்­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­தற்­காக, விலை மலி­வாக இருக்­கும் என்­பதால் மேற்கு வங்­கா­ளத்­தில் உள்ள புர்­ரா­ப­சார் என்ற சந்­தைக்­குச் சென்று புட­வை­களை வாங்கி வர, பணத்துடன் சென்­ற­தா­க­வும் வழியில் ஹவ்ரா­வில் தேசிய நெடுஞ்­சா­லை­யில் தங்களைக் காவல்­துறை மடக்­கி­ய­தா­க­வும் கூறி­னர்.

இத­னி­டையே, இந்த விவ­கா­ரம் பற்றிக் கருத்து கூறிய காங்­கி­ரஸ் கட்சி, பாஜக ஆட்சி நடக்­காத மாநி­லங்­களில் அர­சாங்­கத்தைக் கவிழ்த்­து­வி­டு­வதே பாஜ­க­வுக்கு வேலை­யா­கி­விட்­டது என்­றும் இதன் ஒரு பகு­தி­யா­கவே காங்­கி­ரஸ் எம்எல்­ஏக்­க­ளி­டம் பணத்­தைக் கொடுத்து பாஜக சதித்­திட்­டத்தை அரங்­கேற்­று­கிறது என்­றும் கூறியது.

என்­றா­லும் பண­வி­வ­கா­ரத்­தில் சம்­பந்­தப்­பட்ட மூன்று எம்­எல்­ஏக்­களை­யும் காங்­கி­ரஸ் தலைவி சோனியா காந்தி கட்சி­யை­விட்டு தற்காலிகமாக நீக்­கி­விட்­டார்.

கைதான மூன்று எம்­எல்ஏக்களும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்றனர். உள­வுத் துறை இந்த விவ­காரத்தைத் தன்­வ­சம் எடுத்­துக்­கொண்டு மேல் நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் என்று அதி­கா­ரி­கள் கூறி­ய­தாக பிடிஏ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.