பங்ளாதேஷில் எரிபொருள் விலையுயர்வால் பெட்ரோல் நிலையங்களுக்குப் படையெடுத்த மக்கள்

பங்ளாதேஷில் எரிபொருள் விலையுயர்வால் பெட்ரோல் நிலையங்களுக்குப் படையெடுத்த மக்கள்

2 mins read
9a0a07af-80a1-4953-aca3-d829fd692244
எரிபொருள் விலை உயர்த்தப்படுவதாக பங்ளாதேஷ் அரசாங்கம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் பெட்ரோல் நிரப்ப திரண்ட வாகனமோட்டிகள். படம்: ஏஎஃப்பி -

பங்­ளா­தே­ஷில் அர­சாங்­கம் எரி­பொருள் விலையை 52 விழுக்­காடு வரை உயர்த்­தி­யுள்­ள­தைத் தொடர்ந்து, நாடு முழு­வ­தும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் பெட்­ரோல் நிலை­யங்­க­ளுக்­குப் படை­யெ­டுத்­த­னர். முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வாக இம்­முறை எரி­பொ­ருள் விலை உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

பெட்­ரோல் விலை 51.7 விழுக்­கா­டும் டீசல் விலை 42.5 விழுக்­கா­டும் நள்­ளி­ரவு முதல் உயர்த்­தப்­ப­டு­வ­தாக பங்­ளா­தேஷ் அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

விலை­யு­யர்வு நடப்­புக்கு வரு­வ­தற்­குள் எரி­பொ­ருள் நிரப்­பி­விட, நாடு முழு­வ­தும் மோட்­டார்­சைக்­கி­ளோட்­டி­கள் பெட்­ரோல் நிலை­யங்­களுக்­குப் படை­யெ­டுத்­த­னர். சில நிலை­யங்­கள் எரி­பொ­ருள் விற்­பனையை நிறுத்­தி­ய­தால், ஆங்காங்கே ஆர்ப்­பாட்­டங்­கள் மூண்­டன.

எரி­பொ­ருள் விலை­யு­யர்வு நாட்­டில் மில்­லி­யன் கணக்­கா­னோ­ரின் வாழ்­வா­தா­ரத்­தைப் பெரு­ம­ளவு பாதிக்­கும் என்று ஆர்ப்­பாட்­டக்­காரர்கள் கூறி­னர்.

விலை­யு­யர்வு அறி­விக்­கப்­பட்­ட­வு­டன் சில்­ஹெட் நக­ரில் சில பெட்­ரோல் நிலை­யங்­கள் உட­ன­டி­யாக விலையை உயர்த்த முற்­பட்­ட­தாக காவல்­துறை ஆணை­யர் முகம்­மது நிஷா­ருல் ஆரிஃப் கூறி­னார். இதை எதிர்த்து மக்­கள் திரண்டு ஆர்ப்­பரித்­த­தாக அவர் சொன்­னார்.

உல­கச் சந்­தை­களில் ஏற்­பட்டுள்ள மாற்­றங்­கள் கார­ண­மாக எரி­பொ­ருள் விலையை உயர்த்த முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக எரி­சக்தி அமைச்­சர் நஸ்ரு ஹமீது செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

"அனைத்­து­லக நில­வ­ரத்­தைக் கருத்­தில்­கொண்டு சில மாற்­றங்­களைச் செய்ய வேண்­டி­யுள்­ளது. நில­வ­ரம் சீரா­ன­வு­டன் அதற்கு ஏற்­றாற்­போல எரி­பொ­ருள் விலை­கள் திருத்தி அமைக்­கப்­படும்," என்­றார் அவர்.

உக்­ரே­னில் நில­வி­வ­ரும் போர் கார­ண­மாக பங்­ளா­தே­ஷில் எரி­சக்தி விலை­கள் ஏற்­றம் கண்­டுள்­ளன.

1,500 மெகா­வாட் எரி­சக்தி உற்­பத்தி ஆற்­ற­லுக்­குப் பங்கு வகிக்கும் டீசல் ஆலை­கள் செயல்­பாட்டை நிறுத்­திக்­கொண்­டுள்­ளன. இது, மொத்த எரி­சக்தி உற்­பத்­தி­யில் 10 விழுக்­கா­டா­கும். இத­னால், அண்மை வாரங்­களில் பங்­ளா­தேஷின் பல பகு­தி­களில் நாள் ஒன்­றுக்கு 13 மணி நேரம் வரை மின்­தடை ஏற்­பட்­டுள்­ளது.

இது­போக, வலு­வி­ழந்­து­வ­ரும் நாண­ய­மும் குறைந்­து­வ­ரும் அந்­நிய செலாவணி இருப்­பும் பங்­ளா­தேஷ் அர­சாங்­கத்­துக்கு தலை­வ­லியை ஏற்­படுத்­தி­யுள்­ளது.

கடந்த மூன்று மாதங்­களில், அமெ­ரிக்க டால­ருக்கு நிக­ரான பங்­ளா­தேஷ் நாண­யத்­தின் மதிப்பு 20 விழுக்­காடு சரிந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அனைத்­து­ல­கப் பண நிதி­யத்­தி­டம் பங்­ளா­தேஷ் US$4.5 பில்­லி­யன் (S$6.2 பி.) நிதி­யு­தவி கேட்­டுள்­ள­தாக டெய்லி ஸ்டார் நாளி­தழ் தெரி­வித்­தது.

தற்­போ­தைய பொரு­ளி­யல் நெருக்­க­டியை எதிர்­கொள்­ள­வும் நீண்­ட­கால சவால்­க­ளுக்கு நிதி­ அளிக்­க­வும் பங்­ளா­தே­ஷுக்கு உதவ தான் தயா­ராக இருப்­ப­தாக முன்னதாக பண நிதி­யம் குறிப்­பிட்­டி­ருந்­தது.

உலக வங்கி, ஆசிய மேம்­பாட்டு வங்­கி­யி­டம் இருந்­தும் பங்­ளா­தேஷ் தலா US$1 பில்­லி­யன் கட­னு­தவி கேட்­டுள்­ளது.